கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை யார் தெரியுமா.. புதிய விளக்கம் கொடுத்து அசர வைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்!
ராமநாதபுரம்: தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்பாக விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே சில நாட்களுக்கு முன்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூட 3 மொழிகளில் படித்தவர்தான் என்று கூறி இருந்தார்.
சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பள்ளியில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று 3 மொழிகளை படித்தவர். அவர் சரளமாக இந்தி பேசக் கூடிய அளவிற்கு இந்தியை படித்தவர். இந்தியாவுக்கு வந்த போது பல்வேறு நேர்காணல்களையும் இந்தியில் கொடுத்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு 3 மொழிகள் படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறி வந்தனர்.

இதற்கு பதிலடியாக திமுக தரப்பில் இந்தி திணிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களிலும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதுகுளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். அப்போது ராஜகண்ணப்பன் பேசுகையில், தமிழ்நாட்டில் யாரை இந்தி படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். தாராளமாக படிங்கள்.
ஏன் தமிழும், ஆங்கிலமும் படித்துவிட்டு யாரும் வேலை பார்க்கவில்லையா என்ன.. இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் தான் உலகம் முழுக்க கோலோச்சி வருகிறார்கள். சுந்தர் பிச்சை யாரு.. பெரிய சிஇஓ-வாக இருக்கான்.. Chief Educational officer.. அவன் ஆங்கிலம்தான் படித்துள்ளான். நமக்கு தொடர்பு மொழி ஆங்கிலமே போதும். தமிழ்நாட்டிற்கு வந்து திருக்குறள் பேசுவது இருக்கட்டும்..
நிதி பங்கீடு சரியாக கொடுக்கிறார்களா? அதுமட்டும் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து ரூ.6 லட்சம் கோடியை வரியாக பெற்றுக் கொண்டு, நமக்கு தர வேண்டிய 3 பங்கில் ஒரு சதவிகிதம் மட்டுமே தருகிறது. அதாவது ரூ.10 கேட்டால், 29 பைசா மட்டுமே கொடுக்கிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரூ.181 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கல்வியும், மருத்துவமும் மிகவும் முக்கியம். சில நேரங்களில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் போது நமக்கே பொறாமையாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நுணுக்கமானவர். அவர் யாரிடமும் அதிக கூட பேச மாட்டார். அதேபோல் ஒருமுறை மலேசியாவுக்கு சென்ற போது, அங்கு டீசல் விலை ரூ.36 மட்டும்தான். இங்கு ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் ஜெயிக்கப் போவதில்லை. திமுக ஆட்சி மீது எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியவில்லை. அதனால் பெண்கள் பாதுகாப்பு என்று சொல்ல தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒவ்வொரு பிரச்சனையிலும் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் அடுத்த தேர்தலில் அதிமுக தொண்டர்களும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications