ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென எமோஷன் ஆன ஓபிஎஸ்! அப்படியே உள்ளே போய் அமர்ந்து.. அடுத்து நடந்த சம்பவம்! உற்று பார்த்த ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று ஓ பன்னீர்செல்வம் வழிபாடு நடத்தினார்.

முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்று வருகின்றனர்.

குரு பூஜை காரணமாக தேவர் சிலைக்கு பல தலைவர்கள் இன்று மரியாதை செய்து வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சாதி வெறி கொண்டவன் அரசியலுக்கு தகுதியற்றவன் என்று போதித்தவர் முத்துராமலிங்க தேவர்.. சீமான் மரியாதை! சாதி வெறி கொண்டவன் அரசியலுக்கு தகுதியற்றவன் என்று போதித்தவர் முத்துராமலிங்க தேவர்.. சீமான் மரியாதை!

முத்துராமலிங்க தேவர் நினைவிடம்

முத்துராமலிங்க தேவர் நினைவிடம்

இதையடுத்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று ஓ பன்னீர்செல்வம் வழிபாடு நடத்தினார். இதையடுத்து அங்கு இருந்த தேவர் சிலைக்கு வெள்ளி கவசத்தை ஓ பன்னீர்செல்வம் வழங்கினார். அதன்பின் இந்த கவசம் பொருத்தப்பட்டு சிலை திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை ஓ பன்னீர்செல்வம் இந்த சிலைக்கு வழங்கி இருந்தார். அங்கு இருந்த தேவர் சமுதாயத்தினர் இடையே இந்த சமபவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்


அதிமுகவில் தற்போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் தொடர்பாக மோதல் எழுந்து உள்ளது. பொதுவாக முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் அணிவிக்கப்படும். இந்த கவசம் அதிமுகவின் சொத்து. தங்க கவசத்தை அணிவித்துவிட்டு, பின்னர் பூஜை முடிந்ததும் அதை வங்கியில் மீண்டும் பாதுகாப்பாக வைத்து விடுவார்கள்.

வழிபாடு

வழிபாடு

இதற்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு தரப்பினரும் உரிமை கோரினர். தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. இரண்டு தரப்பின் கோரிக்கையும் ஒன்றாக நேற்று நிராகரிக்கப்பட்டது. மாறாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், தேவர் தங்கக் கவசத்தை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் தேவர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் இன்று வெள்ளி கவசத்தை வழங்கினார். உள்ளே சென்று ஓ பன்னீர்செல்வம் வழிபாடு நடத்திய போது, தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு.. ஐயா.. ஐயா என்று உணர்ச்சிகரமாக கோஷம் எழுப்பினார்கள். உணர்ச்சி பொங்க அவரிடம் பேசினார்கள். அப்போது எம்பி ஓ பி ரவீந்திரநாத் உடன் இருந்தார். கண்களில் லேசாக கண்ணீருடன் உணர்ச்சி பொங்க அவர் நின்று கொண்டு இருந்தார்.

வெள்ளிக்கவசம் - தியானம்

வெள்ளிக்கவசம் - தியானம்

இதையடுத்து சட்டென உடனே உள்ளே சென்ற ஓ பன்னீர்செல்வம் அங்கு இருந்த தேவர் படத்திற்கு முன் சட்டென அமர்ந்தார். என்ன நினைத்தாரோ திடீரென அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார் ஓ பன்னீர்செல்வம். அப்படியே அங்கேயே உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தார். இவர் தியானம் செய்ய போவதை எதிர்பார்க்காத நிர்வாகிகள் மற்றும் ரவீந்திரநாத் அவரும் திரும்பி வரும் வரை காத்து இருந்தனர். இந்த குரு பூஜையில் இன்று ஓ பன்னீர்செல்வம் மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
O Panneerselvam did a sudden Dhayana during Devar Jayanti, Guru Puja ceremony in Pasumpon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X