முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா! பசும்பொன்னில் அன்னதானத்தை தொடங்கி வைக்கும் ஓ.பன்னீர்செல்வம்!
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் ஜெயந்தி விழாவை ஒட்டி அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த சில நாட்களாக அன்னதானத்தை தொடங்கி வைக்குமாறு முக்குலத்தோர் அமைப்பினர் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனால் ஓபிஎஸ் சற்று உற்சாகம் அடைந்திருப்பதுடன் அன்னதானத்திற்கும் தன்னால் இயன்ற தொகையை வாரி வழங்கி வருகிறாராம்.

முத்துராமலிங்கத் தேவர்
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். தேவரின் நினைவிடம் அருகே முக்குலத்தோர் அமைப்பினர் சார்பில் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தென்நாடு மக்கள் கட்சி
இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவன்று தென்நாடு மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் கிராமத்தில் நடத்தப்படவுள்ள அன்னதானத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கவிருக்கிறார். இன்னும் ஒரு சில அமைப்புகளும் ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு விடுத்திருப்பதால் அவர்கள் நடத்தும் அன்னதானத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இதனால் ஓபிஎஸ் சற்று உற்சாகம் அடைந்திருப்பதுடன் அன்னதானத்திற்கும் தன்னால் இயன்ற தொகையை வாரி வழங்கி வருகிறாராம்.

நினைவிடத்தில் மரியாதை
மாவட்ட நிர்வாகத்தின் புரோட்டகால் படி திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி புறப்பட்ட பிறகு அதிமுகவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியையோ அல்லது அவர் சார்பில் வரும் முன்னாள் அமைச்சர்களையோ முந்தி முதல் ஆளாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.

ஜெயபிரதீப்
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் சார்பில் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் பசும்பொன் கிராமத்தில், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நாம் இது குறித்து விசாரித்ததில் இன்னும் இது தொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை என பதில் வந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications