Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரமக்குடியில் லாட்ஜில் அரசியல்வாதியின் கோரமுகம்! மாணவியை சீரழித்த ராமநாதபுரம் கயல்விழி ஞாபகமிருக்கா

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: கவுன்சிலர் பதவியை வகித்த சிகாமணிக்கு 44 வயது..புதுமலர் பிரபாகரன் என்ற மறத்தமிழர் சேனை கட்சியின் மாநில தலைவருக்கு 42 வயது.. ஜவுளிக்கடை, ரியல் எஸ்டேட் செய்யும் ராஜா முகமதுவுக்கு 36 வயது.. இவர்கள் 3 பேரும் சேர்ந்து பல நாட்களுக்கு 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. ராமநாதபுரத்தையே உலுக்கிய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வரப்போகிறது.. இந்த சம்பவத்தின் பின்னணியை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

பரமக்குடி புதுநகரை சேர்ந்தவர் கயல்விழி.. இவரின் வீட்டின் அருகில் 9ம் வகுப்பு மாணவி வசித்து வந்துள்ளார். தனக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் மிகவும் கஷ்டப்படுவதாக கயல்விழியிடம் மாணவி ஒருநாள் கூறியுள்ளார்.

Parakamudi Ramanathapuram ex AIADMK

புரோக்கர் கயல்விழி

உடனே கயல்விழி, தன்னுடைய முதலாளியிடம் சொல்லி உனக்கு பீஸ் கட்ட சொல்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி, அப்போதைய அதிமுக கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிகாமணி அந்த மாணவியை பார்த்ததும், கட்டாயம் படிப்புக்கு உதவுவதாக சொல்லி உள்ளார்..

பிறகுதான், மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதிமுக கவுன்சிலர்

அதற்கு பிறகு, அங்கிருந்தபடியே, தன்னுடைய நண்பர்கள் ராஜா முகமது, பிரபாகரன் 2 பேரையும் போனை போட்டு வரவழைத்துள்ளார்.. மொத்தம் 3 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது அடிக்கடி தொடர்ந்தும் வந்துள்ளது..

ஒரு கட்டத்தில் சிறுமி, தனக்கு நடந்தது குறித்து, தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதற்கு பிறகுதான் போலீசுக்கு ஓடியுள்ளனர்.

3 பேரும் பாலியல் பலாத்காரம்

இதில் புதுமலர் பிரபாகரன் என்பவர் மறத்தமிழர் சேனை கட்சியின் மாநில தலைவர் ஆவார்.. பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் ராஜா முகமது ,36. இவர் பரமக்குடி, பார்த்திபனூர் ஜவுளிக்கடை வைத்துள்ளதுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

மாணவியை பலாத்காரம் செய்வதற்கு கயல்விழியுடன் அன்னலட்சுமி என்ற உமா என்ற புரோக்கரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்த மாணவியை லாட்ஜுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த பின்பு பிரபாகரன் பணம் தர மறுத்துள்ளார்‌. இதுகுறித்து கயல்விழி மற்றொரு நபரிடம் போனில் பேசிய ஆடியோ ஒன்று சிக்கி, அது இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை தந்துவிட்டது.

ஆடியோ அதிர்ச்சி

அந்த ஆடியோவில், "சின்னப்புள்ளை வேணும்னு கேட்டு அடம் பிடிச்சு அனுபவிச்சவன் பணம் கொடுக்காமல் எப்படி ஏமாத்தலாம்? இதெல்லாம் அந்த பெரிய மனுசனுக்கு அழகா?" என்று கயல்விழி ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

இந்த ஆடியோ ராமநாதபுரத்தை அதிர வைத்த நிலையில், இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகாராக சென்று, 24 மணி நேரத்தில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகரன் என்ற பிரபாகரன், ராஜா முஹம்மது, கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய 5 பேரும் கைதானார்கள்.

2 பெண் புரோக்கர்கள்

பரமக்குடி மகளிர் சிறையில் உள்ள 2 பெண் புரோக்கர்களும் அடைக்கப்பட்டு, அவர்களிடம் பலகட்ட விசாரணையும் நடந்தது. அப்போது திடீர் திருப்பமாக சில முக்கிய புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பந்தப்பட்ட 2 பெண் புரோக்கர்களும், எந்நேரமும் சிறுமிகளுடன் சுற்றி திரிந்து கொண்டிருப்பாராம்.. தன்னை அணுகும் பெரிய மனிதர்களிடம் ரேட் பேசி விடுவாராம்.. ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் என்றெல்லாம் பணம் வசூலித்து வந்திருக்கிறார்கள். பணத்தாசை காட்டியே, சிறுமிகளின் சம்மதத்துடன், இப்படியான படுபாதக செயலில் இறங்கி வந்துள்ளனர்.

சிகாமணி சிக்கினார்

இந்த செய்தி வெளியானதுமே, அதிமுக பொறுப்பிலிருந்து சிகாமணி தூக்கப்பட்டார்.. எனினும், சிகாமணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வேலை செய்து வருபவராவார்..

இந்த வழக்கில் 5 பேர் மீதும் போக்சோ பாய்ந்தது.. ஆனால், ராமநாதபுரம் போக்சோ கோர்ட்டில் சிகாமணி ஜாமீன் பெற்றார். அதனை எதிர்த்து சிபிசிஐடி மதுரை ஹைகோர்ட்டில் மனு செய்தநிலையில், அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. உடனே இதனை எதிர்த்து சிகாமணி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்..

இன்று தீர்ப்பு

ஆனால், மதுரை ஹைகோர்ட் உத்தரவு சரிதான் என்று கூறி, வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி, 5 மாதத்தில் முடிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது... இதற்கு பிறகுதான் வழக்கின் தீவிரம் அதிகரித்து, இன்று தீர்ப்பு வர உள்ளது..

படிக்க பணம் கேட்ட பள்ளி மாணவியை அரசியல்வாதிகளிடம் அறிமுகப்படுத்திய 2 பெண்களையும் இளம் சிறுமியை சூறையாடிய 3 ஆண்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ராமநாதபுரத்தில் வலுவாக எழுந்த நிலையில், இன்றையதினம் தீர்ப்பு வரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+