7 மடங்கு நிதி கொடுத்துள்ளோம்.. ஆனாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்.. பிரதமர் மோடி விமர்சனம்!
ராமநாதபுரம்: தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் 7 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அவரால் அழுக மட்டுமே முடியும் என்று கிண்டல் செய்துள்ள அவர், 2014ஆம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட்டிற்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன்பின் ராமநாத சுவாமி கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார். அதன்பின் ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள்.

தொழில்நுட்பத்தையும், பாரம்பரியத்தையும் இன்று சேர்க்கிறது பாம்பன் பாலம். இந்த பாம்பன் பாலம்தான் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம். இது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பூமி. இந்த பாலத்திற்கான தேவை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் ரயில், சாலை போக்குவரத்து, விமான நிலையம், துறைமுகம், நீர், எரிவாயு குழாய்கள் அமைத்தால் போன்ற ஏராளமான கட்டமைப்புக்கான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது இருந்ததை விடவும் கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆண்டுகளில் அதிக நிதியை அளித்திருக்கிறோம். ரயில்வே துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் 7 மடங்கு நிதியை அதிகரித்துள்ளோம். இவற்றை செய்த பின்னரும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும்.
அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. 2014க்கு முன்பு வரை தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறை சார்பாக ஆண்டுக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications