இது என்ன சோதனை! நேற்று சின்ன எம்.ஜி.ஆருக்கு சமாதானம்; இன்று ஆறுதல் கூறக்கூட ஆளில்லாமல் தனிமரம்!
ராமநாதபுரம்: அன்வர் ராஜாவின் பேச்சை நம்பி திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி ஒருவர் புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுகவிலேயே இருந்திருந்தால் கூட கவுரவமாக இருந்திருக்க முடியும் எனக் கருதும் அவர், அன்வர் ராஜாவை நம்பியதால் நட்டாற்றில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக உணர்கிறாராம்.
இது தொடர்பான முழு பின்னணியை இங்கே பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினரால் சின்ன எம்.ஜி.ஆர். என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர் புதுமடம் தர்வேஸ். எம்.ஜி.ஆரை போன்ற சாயல் வர வேண்டும் என்பதற்காக அவரை போலவே சிகையலங்காரம், ஜிப்பா வைத்த சட்டை என அணிந்துகொண்டு அதிமுகவில் நீண்ட நெடுங்காலமாக இருப்பவர் இவர். அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி நான்கு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு அழைப்பை ஏற்று அவர் திமுகவில் இணைந்திருக்கிறார்.

பேச்சை நம்பி
இந்த தகவலை அறிந்த அன்வர் ராஜா, காலையில் திமுகவில் இணைந்த புதுமடம் தர்வேஸை அன்று மாலையே மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வந்துவிட்டார். தலைமையிடம் பேசி கட்சியில் மாவட்டத்தில் நல்ல பொறுப்பு பெற்றுக்கொடுப்பதாக கூறிய அன்வர் ராஜா, தொடர்ந்து அதிமுகவிலேயே பயணிக்குமாறு அவருக்கு சமாதானம் எல்லாம் செய்து அட்வைசும் செய்திருக்கிறார். இதனால் அன்வரின் பேச்சை நம்பி திமுகவில் நான் இணையவில்லை, சும்மா பார்க்கத் தான் போயிருந்தேன் என 12 மணி நேரத்தில் அந்தர்பல்டி அடித்தார் புதுமடம் தர்வேஸ்.

சமாதானம்
இந்நிலையில் அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தகவலை அறிந்ததும், பெரிய மனுஷன் என்று இவர் பேச்சை நம்பி மீண்டும் அதிமுகவுக்கு வந்தோமே, கடைசியில் இவர் நிலையே இப்படியாகிவிட்டதா என புலம்புவதாக தெரிவிக்கப்படுகிறது. சின்ன எம்.ஜி.ஆர். என செல்லமாக அழைக்கப்படும் புதுமடம் தர்வேசுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அன்வர் ராஜா சமாதானம் கூறிய நிலையில், இன்று அவருக்கே சமாதானம் கூற ஆளில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் தூது?
பெங்களூரு புகழேந்தி மட்டுமே நேற்றிரவு முதல் இரண்டு முறை அன்வர் ராஜாவை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் தூண்டில் வீசி வருவதும், அதற்கு ராமநாதபுரம் மாவட்ட திமுகச் செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் திமுகவை தாக்கி அவர் பேசியது கொஞ்சம் நஞ்சமல்ல என தலைமைக்கு மாவட்டச் செயலாளர் தரப்பு தெரிவித்திருக்கிறதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications