ராமநாதபுரத்தில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஷாக்.. நூலிழையில் மாறும் வெற்றி.. தந்தி டிவி எக்ஸிட் போல்
ராமநாதபுரம்: ஓ பன்னீர் செல்வம் போட்டியிட்டுள்ளதாக ராமநாதபுரம் லோக்சபா தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வத்தை நூலிழையில் திமுக கூட்டணி வேட்பாளரான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சிட்டிங் எம்பி நவாஸ் கனி வீழ்த்த வாய்ப்புள்ளதாக தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிட்டிங் எம்பி நவாஸ் கனி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரபிரபா, அதிமுக சார்பில் ஜெய்பெருமாள் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நூலிழையில் திமுக கூட்டணி வேட்பாளர் இந்தியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்பி நவாஸ் கனியிடம் தோல்வியடைவார் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தொகுதியில் திமுக கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு வெற்றி வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவாஸ் கனிக்கு 35 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு 33 சதவீத ஓட்டுகள் பெறுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு 22 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் எனவும், அவர் 3ம் இடத்துக்கு தள்ளப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications