ராமநாதபுரம் தொகுதி: லோக்சபா தேர்தலில் புதிய தடம் பதிப்பாரா மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்?
ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடானை, இராமநாதபுரம்
முதுகுளத்தூர். அருப்புக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது ராமநாதபுரம் லோக்சபா தொகுதி.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஆண் வாக்காளர்கள்- 7,97,012; பெண் வாக்காளர்கள்- 8,08,955; 3-ம் பாலினத்தவர்- 83
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஜே. கே. ரித்தீஷ்(திமுக) 2,94,945
சத்தியமூர்த்தி (அதிமுக) 2,25,030
திருநாவுக்கரசர்(பாஜக) 1,28,322
சிங்கை ஜின்னா(தேமுதிக) 49,571
பிரசில்லா பாண்டியன்(பகுஜன் சமாஜ் கட்சி) 39,086
சலீமுல்லா கான்(மனிதநேய மக்கள் கட்சி) 21,439
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
அன்வர் ராஜா(அதிமுக) 4,05,945
முகமது ஜலீல்( திமுக) 2,86,621
குப்புராமு(பாஜக) 1,71,082
திருநாவுக்கரசர்(காங்கிரஸ்) 62,160
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
நவாஸ் கனி ( முஸ்லிம் லீக்) 4,69,943
நயினார் நாகேந்திரன்(பாஜக) 3,42,821
வி. டி. என். ஆனந்த்(அமமுக) 1,41,806
புவனேஸ்வரி (நாம் தமிழர் கட்சி) 46,385
விஜய பாஸ்கர்(மக்கள் நீதி மய்யம்) 14,925
2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்
நவாஸ் கனி (முஸ்லிம் லீக்)
ஜெயபெருமாள் (அதிமுக)
ஓ.பன்னீர்செல்வம்( சுயேட்சை பாஜக)
சந்திர பிரபா ஜெயபால் (நாம் தமிழர் கட்சி)
ராமநாதபுரம் கள நிலவரம் என்ன?: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது. 2019-ம் ஆண்டு இத்தொகுதியில் அமமுக சுமார் 1.41 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது ஓபிஎஸ்-க்கு சற்று பலம் தரும். திமுகவின் இயல்பான வாக்கு வங்கி முஸ்லிம் லீக்குக்கு பெரும் நம்பிக்கையாக உள்ளது. ராமநாதபுரத்தில் காங்கிரஸ் 5 முறை வென்றிருக்கிறது. அதிமுக 4 முறை, திமுக 3 முறை வென்ற தொகுதி. அதே நேரத்தில் தமாகா, பார்வர்ட் பிளாக், சுயேட்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் வென்றுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை முக்கியமான ஒன்று. காவிரி கூட்டு குடிநீர் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தொழிற்சாலையே இல்லாத ஒரு தொகுதியாக ராமநாதபுரம் அவலத்தை சுமந்து நிற்கிறது. இதனால் வேலைவாய்ப்பினை தலைவிரித்தாடுகிறது. அதேபோல அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும் போராடுகிற நிலைமை. மீனவர் பிரச்சனைக்கும் தீர்வு காணவே முடியாத கையறு நிலை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications