முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற போலி வீல்சேர் கிரிக்கெட் அணி கேப்டன் மீது வழக்குப் பதிவு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வினோத் பாபு பேக்கரி உரிமையாளரிடம் ரூ 1 லட்சம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழ்செல்வனூரை சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடந்த ஆசிய கோப்பைக்கான வீல்சேகர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்று கோப்பை வென்றதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த வினோத் பாபு, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கஷ்டப்படுவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் தொகுதித்குள்பட்டவர் என்பதால் அவரை சந்தித்தும் வாழ்த்து பெற்றார்.
வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி அளிக்கும்படி கேட்டிருக்கிறார். இதையடுத்து அமைச்சரும் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சருடன் சென்னை சென்ற வினோத் பாபு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து லண்டனில் நடந்த போட்டியில் வென்றதாக கூறி வாழத்துகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வினோத்பாபு கூறியதன் மீது சந்தேகம் இருந்ததால் உளவுத் துறையினர் விசாரணையில் இறங்கினர். வெளிநாடு சென்று விளையாட்டு போட்டிகளில் வென்றதாக கூறிய வினோத் பாபு எந்த வெளிநாட்டிற்கும் செல்லவில்லை என்பதும், அவரிடம் பாஸ்போர்ட் கூட கிடையாது என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியானது. இதுகுறித்து விசாரணை அறிக்கை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து வினோத் பாபுவிடம் கேட்ட போது பாரா ஒலிம்பிக் பளூ தூக்கும் போட்டியிலும் மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச வீல்சேர் கிரிக்கெட்டில் கேப்டனாக விளையாடியுள்ளேன். வெளிநாட்டிற்கு சென்று விளையாடி வென்றதாக தவறாக கூறிவிட்டேன். சுய முயற்சியில்தான் முதல்வரையும் அமைச்சரையும் சந்தித்து அரசு பணி வழங்க கோரிக்கை விடுத்தேன். மற்றபடி யாரையும் ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
அதாவது கடையில் வாங்கி கோப்பையை உலக கோப்பை என முதல்வரிடம் காட்டி ஆசி பெற்றதும் தெரியவந்தது. மேலும் லண்டன் செல்ல பண உதவி வேண்டும் என கேட்டு பேக்கரி உரிமையாளரிடம் ரூ 1 லட்சம் மோசடியாக பெற்றதாக வினோத் பாபு மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸார் வினோத் பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications