பட்டா பெயர் மாற்றம்.. ராமநாதபுரம் விஏஓ கையில் என்ன அது.. தலையெழுத்தையே மாற்றிய விவசாயி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பொட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கீழக்கொடும்பலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கீழக்கொடும்பலூர் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக அணுகியவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கி விஏஓ கைதாகி உள்ளார்.
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் வாங்க முயன்றாலோ, லஞ்சம் கேட்டாலோ தயவு செய்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளியுங்கள். அப்படி புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.

இதன் காரணமாகவே சில வருவாய் துறை அலுவலகங்களில், தாசில்தார், விஏஓ, சர்வேயர் உள்பட பல்வேறு அதிகாரிகள் லஞ்ச புகாரில் சிக்குவது நடக்கிறது. அப்படித்தான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தில் பட்டா வழங்க லஞ்சம் கேட்ட புகாரில் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பொட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த 36 வயதாகும் சரவணன் என்பவர் கீழக்கொடும்பலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பட்டா விவகாரம் தொடர்பாக அணுகியுள்ளார்.
கீழக்கொடும்பலூர் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக சரவணனை அணுகியிருக்கிறார். அதற்கு அவர் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த விவசாயி முதலில் ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு அனுப்பியிருக்கிறாராம். மீதமுள்ள ரூ.2 ஆயிரத்தை கொடுக்க விரும்பாத விவசாயி, இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த பணத்தை முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து அந்த விவசாயி, சரவணனிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை சரவணன் வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணனை கையும், களவுமாக கைது செய்தார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications