எஸ்பி ஆபிசில் திமுக ஐடி விங்க் அளித்த பரபரப்பு புகார்.. ராமேஸ்வரம் பாஜக பிரமுகர் அதிரடியாக கைது
ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் பேஸ்புக்கில் தொடர்ந்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பகவத் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
முன்பெல்லாம் கட்கிகளில் உள்ளவர்கள் நேரில் தான் சண்டை போடுவார்கள். வாய்த்தகராறு, கைகலப்பு என்று இருக்கும். அதேபோல் ஆளும் கட்சியனர் மேடை அமைத்து எதிர்க்கட்சியினரை கடுமையான விமர்சிப்பார்கள். அதில் உள்ள பேச்சாளர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை ஒவ்வொருவராக பல்வேறு விஷயங்களுக்கு கேள்வி எழுப்பி, ஏக வசனத்தில் பேசுவார்கள்.

இதேபோல் எதிர்க்கட்சியினரும் வார்டு வாரியாக மீட்டிங் போட்டு முதல்வர் தொடங்கி, ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை வசைபாடுவார்கள். கட்சி மீட்டிங்கில் தான் திட்டுவது எல்லாம் இருக்கும். இப்போது அந்த கலாச்சாரம் அடியோடு மாறி இருக்கிறது. தேர்தலின் போது மட்டுமே மீட்டிங் போட்டு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி திட்டுகிறார்கள். மக்களிடம் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.
அதேநேரம் சமூக ஊடங்களில் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை வசைபாடுவதும், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினரை வசைபாடுவதும் தினமும் நடக்கிறது. குறிப்பாக ட்விட்டரில் தினமும் புதிய பிரச்சனைகளை கிளப்பி ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மாறி மாறி சண்டை போடுகிறார்கள்.
போலி செய்திகளை பரப்புதல், அவதூறான கருத்துக்களை வெளியிவது, நடக்காத சம்பவத்தை நடந்ததாக கூறுவது, இப்படியெல்லாமா பேசினார் என்று நம்ப வைக்கும் அளவிற்கு செய்தி நிறுவனங்களின் பெயரில் போலி கார்டுகள் வெளியிடுவது, வீடியோக்களை எடிட் செய்து திரித்து வெளியிடுவது, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது, கேட்கவே கூடாத அளவிற்கு மோசமாக விமர்சிப்பது, குறிவைத்து தலைவர்களை விமர்சிப்பது என்று நடக்கிறது.
அதேநேரம் பிராண்ட் மார்க்கெட்டிங் போல் புகழை பெருக்கவும், மக்களிடையே நன்மதிப்பை உருவாக்கவும், வீடியோ மற்றும் கட்டுரைகள் வெளியிடுவது சமூக வலைதளங்களில் அதிகமாக நடக்கிறது. அதேபோல் ஹேஷ்டேக் போட்டு மோசமான ஒருவரை வசைபாடுவதும் ட்விட்டரில் அதிகமாக நடக்கிறது. கட்சிகளின் ஐடி விங்குகள் தான் இந்த சண்டைகளை சில காலம் முன்பு வரை போட்டார்கள். இப்போது கட்சியின் அனுதாபிகள் இப்படி சண்டை போடுகிறார்கள் . சென்னை வெள்ளம் வந்த போது, இவர்களின் சண்டை பெரிய அளவில் இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஏரக்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்பவருடைய மகன் ரவிசங்கர் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் ராமேசுவரம் நகர் தலைவராக இருந்து வருகிறார்.. இவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் முகநூலில் தொடர்ந்து அவதூறாக கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பகவத்சிங், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, முகநூலில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக ரவிசங்கரை கைது செய்தார். இந்த சம்பவம் பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications