ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.. மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்கியது
ராமநாதபுரம்: ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகியிருக்கிறது.. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் உள்ளிட்ட 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல இந்த மீனவர்களின் 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

32 மீனவர்கள் கைது
இந்நிலையில் நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 470க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 3000-க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள்..
இரவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதில் 5 விசைப்படகுகளை விரட்டிப் பிடித்து, அதில் இருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களிடத்தில் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
தொடரும் கைது நடவடிக்கைகள்
இதனிடையே, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரியும், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. அதில், மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்றையதினம் காலவரையற்ற போராட்டத்தை ராமேஸ்வர மீனவர்கள் துவங்கியிருக்கிறார்கள்.. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று முதல் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்..
இன்று முதல் வேலை நிறுத்தம் ஆரம்பம்
இதனால், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..
இந்த வேலை நிறுத்தத்தினால், 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் 1 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது... அடுத்த சில தினங்களில் மாநிலம் தழுவிய மீனவர்கள் போராட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என மீனவ சங்கங்கள் கூறியிருந்த நிலையில், இன்றைய ராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் கவனம் பெற்று வருகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications