ஆட்சி என் கையில சிக்குச்சு..மெரினா சுடுகாடு சுத்தப்படுத்தப்படும்! பிரதமருக்கே இடமில்ல..சீமான் சீற்றம்
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் பாதிக்கப்பட்டு வரும் தமிழக மீனவர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒரு சதவீதம் கூட மீனவர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என விமர்சித்தார். மேலும் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மெரினா கடற்கரையில் சுடுகாடு அகற்றப்படும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவர்கள் நலனை உறுதி செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பில் தங்கச்சிமடம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்," இது நம் மீனவர் பிரச்சனை அல்ல.. நம் உரிமை பிரச்சினை.. கடற்கரையில் சமாதிகள் கட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என நாம் சொல்வது மீனவர் வாழ்வுரிமைக்காக அல்ல, கடற்கரை தமிழனுடைய கடற்கரை என்னுடைய பொது சொத்து அதில் யாருக்கும் இடம் கிடையாது. தாத்தாவுக்கு கிடையாது யாருக்கும் கிடையாது.
கடற்கரை தான் இந்திய நாட்டிலே இந்த நாட்டை ஆண்ட பிரதமர் யாராவது கடற்கரையில் கல்லறை கட்டி படுத்திருக்கிறார்களா? இந்திய நாட்டிலே மொத்தம் எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் யாராவது கடற்கரையில் கல்லறை அமைத்து இருக்கிறார்களா. நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று ஆளாளுக்கு இரண்டு இரண்டு ஏக்கரில் சமாதி கட்டி படுத்திருக்கிறீர்கள்.
எங்கள் பாட்டனை போல விடுதலைக்காக செக்கு இழுத்தீர்களா? தூக்கில் தொங்கினீர்களா? சிறைப்பட்டீர்களா? மிதிபட்டீர்களா? ஒன்றும் இல்லை. அதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு வெறி வரும் எங்களை எல்லாம் சுடுகாட்டில் போட்டுவிட்டு நாட்டையே சுடுகாடாய் ஆக்கிவிட்டு நீங்கள் கடற்கரையில் குதூகலமாக படுத்து இருக்கிறீர்கள். மீனவர்கள் எல்லாம் பேராசைப்பட்டு எல்லை தாண்டி போனார்கள் என்கிறார்கள் நீங்கள் எதற்கு அங்கே படுத்திருக்கிறீர்கள். இதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நான் கேட்பேன். நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும்.
உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கை பார்க்குமா? இலங்கை கடற்படையிடமிருந்து நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை? குஜராத் மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றால் கொதித்தெழுந்து கொலை வழக்குப் பதிந்து, போர் முழக்கமிட்டு ஐ.நா.மன்றம் வரை அபாய மணியடிக்கும் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள், இதுவரை 800க்கும் மேற்பட்ட எம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட போதிலும் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன்? தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால் தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழராய் பிறந்ததைத் தவிர எம் மீனவர் செய்த பிழை என்ன?" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications