Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டிரஸ் இல்லாமல் வீடியோ எடுத்து அனுப்பு".. கிலி தரும் "எனி டெஸ்க்".. பெண்களை மிரட்டிய கும்பல்.. கைது!

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தனிமையில் வாடும் பெண்கள்தான் இண்டர்நெட் கஃபே கும்பலின் பிரதான வேலை.. டிரஸ்ஸே இல்லாமல் வீடியோ எடுத்து அனுப்புமாறு பெண்களை மிரட்டுவது, அந்த வீடியோவை வைத்து பணம் சம்பாதிப்பது என இதே வேலையாக இருந்துள்ளனர்.. தற்போது இது சம்பந்தமாக 2 பேரை கீழக்கரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக பதிவாகி வருகிறது.. எனினும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து உடனே தகவல் தெரிவிக்க மாவட்ட எஸ்பி வருண்குமார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தன்னுடைய செல்போன் நம்பர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.. அந்த நம்பருக்கு பொதுமக்களும் நிறைய புகார்களை பயமின்றி தெரிவித்து வருகிறார்கள். கீழக்கரையில் 3 நாட்களுக்கு முன்புகூட பெண்களை குறிவைத்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைதாகி உள்ளனர்.

போன் நம்பர்

போன் நம்பர்

தற்போது, இன்னொரு சம்பவமும் ஏர்வாடியில் நடந்துள்ளது... கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவரே, எஸ்பி வெளியிட்டிருந்த அந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு, இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.. அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்:

செல்போன் கடை

செல்போன் கடை

ஏர்வாடியை சேர்ந்தவர் பாதுஷா, ஹாஜி.. இவரும் ஏர்பாத் நெட் கஃபே என்கிற செல்போன் கடையில், அரசு சான்றிதழ், பாஸ்போர்ட், விசா, இணைய வங்கி சேவை பெற வருவோர்களுக்கான சேவைகளை செய்து வருகின்றனர்... இந்த நிறுவனத்தில் சேவைகளை பெற விரும்பும் ஏராளமான பெண்கள் வந்து போவார்கள்..

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், பல பெண்கள், பண பரிவர்த்தனை சேவை பரிமாற்றத்திற்காக இங்கு வருவார்கள். அப்போது, செல்போனில் "எனி டெஸ்க்" என்கிற ஆப்பை திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து, அதன்மூலம் பெண்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்து விடுவார்கள்.. அந்த ஆபாச வீடியாவை காட்டி, மிரட்டி.. பணம் பறிப்பார்கள்.. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் கணவருக்கு தெரிந்தால், வாழ்வு பறிபோய்விடும் என்று பயந்து நிறைய பெண்கள் கேட்ட பணத்தை தந்து வந்துள்ளனர்.

கும்பல்

கும்பல்

மேலும், அந்த கடையின் ஊழியர் சகாபுதீன் என்பவர் தன்னை ஏமாற்றி கல்யாணம் செய்வதாக கூறி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் என்றும், டிரஸ் இல்லாமல் தன்னை வலுக்கட்டாயமாக போட்டோ எடுத்து, மிரட்டுகிறார் என்றும் சம்பந்தப்பட்ட பெண், எஸ்பியிடம் தெரிவித்தார். எனவே தான் உட்பட, பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களை இந்த கும்பலிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கைது

கைது

இதனை அடுத்து எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டது.. ஏர்பாத் நெட் கஃபே கடையில் விசாரணையும் நடத்தப்பட்டு, பாதுஷா, சகாபுதீன் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.. இவர்களிடம் லேப்டாப்கள், காஸ்ட்லி செல்போன்களும் பறிமுதல் செய்யப்ப்பட்டுள்ளன.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+