சோகம்... பொருளாதார நெருக்கடியால் பசி, பட்டினி! அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி!
ராமநாதபுரம்: இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதி தனுஷ்கோடிக்கு கள்ளப்படகில் அகதியாக வந்து மயங்கி கிடந்தார். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து மரைன் போலீசார் மீட்டனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக இது மாறியுள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாக இலங்கையில் பெட்ரோல், டீசல், உணவு பொருட்களில் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு அகதிகள் வருகை
இந்நிலையில் தான் இலங்கையில் இருந்து ஏராளமான மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர். தற்போது வரை 90 பேர் கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடியில் மயங்கிய முதிய தம்பதி
இந்நிலையில் இன்று காலை தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே முதிய தம்பதி மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்த மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்களை மீட்டு விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட தம்பதி எழுந்தனர்.

மீட்பு - விசாரணை
இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது அவர்கள் இலங்கை மன்னாரை சேர்ந்த பெரியண்ணன் சிவன் (வயது 82 )பரமேஸ்வரி (வயது 77 ) என்பது தெரியவந்தது. இலங்கை பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அவமன்னாரை சேர்ந்த இவர்கள் மயங்கிய நிலையில் கடற்கரையில் கிடந்துள்ளனர். இவர்களை மீட்ட மரைன் காவல் காவல் துறையினர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து இந்த தம்பதியை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகதிகள் 92 ஆக அதிகரிப்பு
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு தொடர்ந்து அகதிகளாக இலங்கை மக்கள் வருகின்றனர். தற்போது வரை 90 பேர் வந்துள்ள நிலையில் தற்போது இந்த தம்பதி வந்துள்ளனர். இதன்மூலம் மார்ச் 22ம் தேதிக்கு பிறகு மட்டும் தமிழகத்துக்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications