தொடரும் அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை! படகுகளும் பறிமுதல்
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மீனவர்களை சிறை பிடிப்பது மட்டும் இன்றி அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்துவது என பல்வேறு அட்டூழியங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தான், தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை மட்டும் இன்றி அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications