திடீர் பரபரப்பு.. ராமநாதபுரத்தில் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிப்பு.. என்ன காரணம்?
ராமநாதபுரம்: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இப்போது தொடங்கி நடந்து வரும் நிலையில், ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடந்தது. கடந்த சனிக்கிழமை கடைசிக் கட்ட தேர்தல் நடந்தது.

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து ஈவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஒரு தொகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் இப்போது திமுக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ராமநாதபுரத்தில் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், பல தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது. முறையான கையெழுத்து இல்லை உள்ளிட்ட காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படியே ராமநாதபுரத்தில் சுமார் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முகவர்கள் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடியும் தருவாயில் இது தொடர்பாக முகவர்கள் மீண்டும் கேள்வி எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது,
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications