நடுக்கடல்.. நள்ளிரவு.. தமிழர்களுக்கு நடந்த சித்திரவதை! இலங்கை கடற்படை தாக்கி பார்வையிழந்த மீனவர்
ராமநாதபுரம்: இலங்கை கடற்படை தாக்குதலில் 90 சதவீதம் கண்பார்வையை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க அனுமதி பெற்றுக்கொண்டு 2500 மேற்பட்ட மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வழக்கம் போல மீன்பிடிக்க கடல் சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தமிழக மீனவர்கள் அருகே வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

தாக்குதல்
மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தோணிய அடிமை என்பவருக்கு சொந்தமான படகை முட்டி மோதி அச்சுறுத்தியதாக மீனவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

கடும் தாக்குதல்
இலங்கை கடற்படையை சேர்ந்த 5 வீரர்கள் தமிழக மீனவர்களின் படகில் ஏறி, மீன்பிடி வலைகளை வெட்டி வீசிய அட்டூழியத்தில் ஈடுபட்டு ஏராளமான மீன்களையும் அள்ளிச் சென்று உள்ளார்கள். அத்துடன் தமிழக மீனவர்கள் 8 பேரையும் அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் ஜான்சன் என்ற மீனவரின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நள்ளிரவு சித்திரவதை
தமிழக மீனவர்களை நடுக்கடலில் நள்ளிரவு இரவு முழுக்க அடித்து சித்திரவதை செய்த இலங்கை கடற்படையினர், பல மணி நேர துன்புறுத்தல்களுக்கு பிறகே தமிழக மீனவர்களை விடுவித்து உள்ளனர். கண்ணில் படுகாயமடைந்த மீனவர் ஜாக்சன் மதுரை தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை செய்து இருக்கிறார்.

மீனவர் பேட்டி
சிகிச்சைக்கு பின்னர் தங்கச்சிமடத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாங்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு வந்து இலங்கை கடற்படை என்னையும் என்னுடன் மீன்பிடிக்க வந்த 8 மீனவர்களையும் தாக்கிவிட்டு மீன்களை அள்ளி சென்றனர்.

90% பார்வை போய்விட்டது
அவர்களை எங்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் எனது கண்கள் பாதிக்கப்பட்டன. நான் உடனடியாக மதுரைக்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்டேன். எனக்கு அளித்த மருத்துவர் 90% கண்பார்வை போய்விட்டதாகவும், மீண்டும் கண் பார்வை வர வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications