குவைத்தில் அடங்கிய உயிர்..கண்ணீரில் மூழ்கிய உறவுகள்! இராமநாதபுரம் ராமு உடல் அடக்கம்..ஓடோடி வந்த அரசு
ராமநாதபுரம்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கருப்பணன் ராமு வின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது. இதனால் கட்டிடத்தின் பிற பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது.
அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்தது. மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசு சார்பில் சிறப்பு விமானம் அனுப்பி குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்தார். இதனையடுத்து 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் நேற்று மாலை கொச்சி வந்தடைந்தது.
கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த வகையில் தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்பட்டது.

அவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு செயலக தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து 7 பேரின் உடல்களும் ஏழு வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமு என்பவரின் உடல் இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலியைத் தொடர்ந்து ராமுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமு மரணமடைந்ததை யொட்டி அவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸாடாலின் ரூ.5 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து நிவாரண தொகையை தென்னவனூரில் அவரின் குடும்பத்தினரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications