அடடே... பசும்பொன்னுக்குள் நுழைய ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு தடை விதிக்கனும்- என்ன காரணம்? பரபர போஸ்டர்?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தாள் மற்றும் குருபூஜையில் பங்கேற்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி தேவர் பேரமைப்பு கூட்டமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை பசும்பொன்னில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று காலை தொடங்கின. பின்னர் 1008 திருவிளக்கு பூஜை மாலை நடைபெற்றது.

Thevar Federation demands to ban RSS, BJP to enter Pasumpon

இன்று 2-வது நாள் யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை, அரசியல் விழா நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்வில் பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி எடுத்து பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திரளுவர்.

குவியும் தலைவர்கள்: இதனைத் தொடர்ந்து நாளை அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவர். தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் நாளை பசும்பொன் வருகை தர உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தேவர் நினைவிடத்துக்கு வருகை தர உள்ளனர்.

எடப்பாடிக்கு ஏற்கனவே எதிர்ப்பு: பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தரக் கூடாது என ஏற்கனவே ஒருதரப்பு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியது. அத்துடன் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தது. தேவர் சமூகத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதால் அவரை பசும்பொன்னுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என அந்த தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால் எதிர்ப்பை மீறி படை பட்டாளத்துடன் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்கிறார்.

பசும்பொன்னில் மண்டபங்கள்: மேலும் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் ரூ1.55 கோடியில் அமைக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் தனித்தனியாக மரியாதை செலுத்தும் வகையில் இந்த மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு தடை விதிக்க கோரிக்கை: இதனிடையே பசும்பொன்னுக்குள் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை விதிக்க கோரி தேவர் பேரவை கூட்டமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் 2-ம் உலகப் போரில் ஆங்கிலேயருடன் கைகோர்த்து ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள் நேதாஜியை, முத்துராமலிங்க தேவரை வீழ்த்த முயற்சித்ததை மறப்போமா? தேவர் இன துரோகிகள் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் பசும்பொன்னுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டுகிறோம் என வாசகங்கள் இடம் பெற்றுளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+