முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை தொடங்கியது.. முதல்வர் ஸ்டாலின் அக்.30ல் பசும்பொன் பயணம்
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் தொடங்கியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பொதுவாக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 28ம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன. வரும் 30ஆம் தேதி தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம்
சில ஆண்டுகளுக்கு முன் தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தேவர் குருபூஜையுடன் கும்பாபி ஷேகமும் இன்று நடைபெற்றது. விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் மதுரை பயணம்
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார்.
பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி பயணம் செய்கிறார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.

போக்குவரத்து மாற்றம்
ராமநாதபுரம் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் பசும் பொன் வந்து செல்லும் வாகன வழித்தடங்களும், தடை செய்யப்பட்டுள்ள வாகன வழித்தடங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி வரக்கூடாது.

வட மாவட்ட வாகனங்கள்
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளுர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
தேவர் குருபூஜைக்கு பத்தாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈடுபடுத்தப்பட உள்ளனர். 13 ட்ரோன் கேமிரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

குருபூஜை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேவரின் குருபூஜை விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என்றும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது, பேருந்துகள் அமர்ந்து அமைதியாக பயணிக்க வேண்டும் என தென்மண்டல ஐஜி கூறியுள்ளார்.
-
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications