Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளும் கட்சியை‛பழமொழி’ சொல்லி சீண்டிய டிடிவி தினகரன்.. திரும்பும் திமுக.. என்ன சொன்னார் தெரியுமா?

ஆளும் திமுகவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் பழமொழி ஒன்றை கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றியை பெறவில்லை. வெற்றியை வாங்கிவிட்டனர் என விளாசினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய பாயிண்டை கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ முருகன். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார். இவரது இல்ல திருமண விழாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்றார். அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான்

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான்

இந்த வேளையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது பற்றியும், திமுக அரசையும் டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.தமிழ்நாட்டில் 1989 மதுரை கிழக்கு, மருங்காபுரி, 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. நான் ஆர்கே நகர் தேர்தலில் சுயேச்சையாகவே வெற்றி பெற்றிருக்கிறேன். மற்றபடி அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் அது நடந்துள்ளது.

20 மாதத்திலேயே அதிருப்தி

20 மாதத்திலேயே அதிருப்தி

இருப்பினும் திமுக மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. 60 மாதங்களில் வரவேண்டிய அதிருப்தி என்பது 20 மாதங்களிலேயே திமுக மீது வந்துள்ளது. இது உண்மை. தேர்தல் வாக்குறுதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்ததுபோது அவர் போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டு அவர் செயல்பட்டு வருகிறார். நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். எஞ்சியதை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இது வார்த்தை ஜாலம்.

வெற்றியை வாங்கிவிட்டனர்

வெற்றியை வாங்கிவிட்டனர்

முதல்வர் ஸ்டாலின் விடியல் அரசை தருவதாக கூறினார். ஆனால் விடியாத ஆட்சி தான் உள்ளது. அனைத்திலும் ஊழல் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஊழலை தாண்டியுள்ளது. இது ஒரு மோசமான ஆட்சியாக உள்ளது. 10 ஆண்டுக்கு பிறகு ஆட்சிக்கு வந்ததால் திமுக காய்ந்த மாடு கம்பகொல்லையில் பாய்ந்தது போல் லூட்டி அடிக்கிறது. 20 மாத ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு வேதனையில், வருத்தம் உளவுத்துறை மூலம் தெரியாமல் இருக்குமா?. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வாக்காளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சேர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இது தவறான முன்னுதாரணமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெற்றியை வாங்கிவிட்டு பேசுகிறார். ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சிக்கு மக்கள் வழங்கிய வெற்றியாக நான் பார்க்கவில்லை.

அரசியல் ஆதாயத்துக்காக..

அரசியல் ஆதாயத்துக்காக..

இந்த வேளையில் திமுக, பாஜக கூட்டணியில் இணையுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன், ‛‛ 1999ல் வாஜ்பாயின் பாஜக கூட்டணியில் திமுக இருந்தது. டவுன் பஸ்சில் இறங்கி அடுத்த பஸ்சில் ஏறுபவர்கள் தான் திமுக. அதன்பிறகு காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்தது. மத்தியில் முக்கிய துறைகளை திமுக பெற்றது. திமுக அரசியல் ஆதாயத்துக்காக ராஜதந்திரம் என்ற பெயரில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+