66 நாட்களாக நகர்த்தப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம்! நடுப்பகுதிக்கு வருவது எப்போது?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் உள்ள புதிய ரயில் தூக்கு பாலம் மே 21 ஆம் தேதி பாலத்தின் நடுவில் செல்லும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
பாம்பன் கடலில் ரூ 550 கோடியில் 21 கி.மீ. தூரத்திற்கு புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 1.6 கி.மீ. தூரத்திற்கு 100 சதவீதம் பணிகள் நடந்து முடிந்துள்ளன. 500 மீட்டரில் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் பாம்பன் கிழக்கு கடற்கரையில் 700 டன்னில் அமைக்கப்பட்ட புதிய தூக்கு பாலத்தை புதிய பாலத்தின் நடுவில் பொருத்தும் பணி கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது.

இந்த புதிய தூக்கு பாலம் ஹைட்ராலிக் இயந்திரத்தின் மூலம் நகர்த்தப்பட்டு வருகிறது. நேற்றுடன் 66 நாட்களாக நகர்த்தப்பட்டு வந்த நிலையில் பாலத்தின் நடுவில் செல்வதற்கு இன்னும் 60 மீட்டர் தூரமே உள்ளது. இதனால் புதிய தூக்கு பாலம் பாலத்தின் நடு பகுதிக்கு மே 21 ஆம் தேதி செல்ல வாய்ப்புள்ளது.
அதன் பிறகு ராட்சத கிரேன்களை கொண்டு தூக்கு பாலத்தை புதிய பாலத்தில் பொருத்த இரண்டு மாதங்களாகும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பால பணிகள் முடிவடைந்துவிட்டால் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இந்த பாலம் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்தரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன.
ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமாக விளங்குகிறது. 2010ஆம் ஆண்டு மும்பையில் பாந்த்ரா- வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இதுதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. 1988 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு பாம்பன் ரயில் பாலத்தை கட்டும் பணிகள் தொடங்கின.
2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கடல் அரிப்பின் காரணமாக இந்த ரயில் பாலம் பலவீனமடைந்ததால் பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டன. கடந்த 2009ஆம் ஆண்டில் அதிக எடையுள்ள சரக்கு ரயில்களை தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ரூ. 550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலமானது கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2,065 மீட்டர் நீளமானது. இங்கு 143 தூண்கள் உள்ளன. இந்த கடல் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. பாலத்தின் இரு தூக்குகளும் நெம்புகோல்களை பயன்படுத்தி கையால் திறக்கப்படுகின்றன. மாதந்தோறும் 10 பெரிய கப்பல்கள் இந்த பாலத்தின் கீழே செல்லும். பாம்பன் பாலம் இந்தியாவின் நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது.
இந்த ரயில் பாதை இரண்டாக இருந்தது. ஒன்று ராமேஸ்வரத்தில் முடிவடைந்தது. இன்னொன்று தனுஷ்கோடியில் முடிவடைந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டு சூறாவளியின் போது தனுஷ்கோடிக்கான ரயில் பாதை முற்றிலும் அழிந்தது. இந்த தூக்கு பாலம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் லிப்ட் வடிவ தூக்கு பாலம் வடிவமைத்து இதை நடுவே பொருத்த மார்ச் 13 ஆம் தேதி முதல் நகர்த்தி வருகிறார்கள்.
ஆசியாவில் முதல் லிப்ட் முறையில் இயங்கும் இந்த பாலம் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீட்டருக்கு திறந்து மூடப்படுகிறது. அதாவது இதற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையான உயரத்திற்கு திறந்து மூடப்படும்.
பாம்பன் பாலத்தின் கிழக்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் 23 கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகளும் தூக்கு பாலத்தை பொருத்தும் பணிகளும் நிறைவடைந்து இந்த ஆண்டு டிசம்பருக்குள் பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கர்டர்கள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையில் பாலத்தின் கர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அங்கிருந்து லாரி மூலம் கர்டர்கள் தூக்கு பாலத்தின் தூண்களை கொண்டு வந்து பாம்பனில் பொருத்தப்பட்டது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications