ராமேஸ்வரம் தெற்கு ரத வீதி சொகுசு விடுதியில் அலை மோதிய ஆண்கள் கூட்டம்.. மொத்தமாக சிக்கிய கும்பல்
ராமநாதபுரம்: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. அங்குள்ள ஒரு விடுதியில் விபச்சாரம் நடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவிலேயே மிகவும் அற்புதமான தீவுப்பகுதியில் உள்ள ஆன்மீக தலம் என்றால் அது ராமஸ்வரம் தான். இது கண்களை கவரும் வகையிலான இயற்கை அற்புதம் நிறைந்த அமைதியான பகுதியும் கூட. ராமேஸ்வரம் தனுஷ்கொடியில் இருப்பது போன்ற கடல் எங்குமே இல்லை. அதேபோல் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் இன்றும் பெருமைமிகு அடையாளமாக உளளது. ஆகும். புனித யாத்திரை தலமான ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் இருக்கிறது.

இந்த கோயில் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கான புனிதமான இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மிக அருகில் உள்ள இடமாகவும் ராமேஸ்வரம் இருக்கிறது. இலங்கையில் இராவணனுடனான போர் முடிந்து திரும்பிய ராமர், மோதலின் போது தான் செய்த பாவங்களை போக்க சிவபெருமானை நினைத்து தவமிருந்து பிரார்த்தனை செய்ததாக நம்பப்படும் இடமாக ராமேஸ்வரம் இருக்கிறது. இப்படி ஆன்மீக ரீதியாகவும் சுற்றுலா ரீதியாகவும் புகழ்பெற்ற ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அப்படிப்பட்ட ராமேஸ்வரம் கோயில் அருகே தெற்கு ரதவீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர். இறுதியாக அங்கு விபச்சாரம் நடப்பதை அந்த பகுதி மக்கள் கண்டுபிடித்தனர். இதுபற்றி சிலர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் சென்று அங்கு அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அறையில் காத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 34 வயதாகும் பெண், புதுக்கோட்டையை சேர்ந்த 40 வயதாகும் பெண், உடந்தையாக இருந்த விடுதி உரிமையாளர் செல்லமுத்து 63, ராமநாதபுரம் பெண்ணின் கணவர் பாலமுருகன் 40, ஏஜென்டாக இருந்த காளிதாஸ் 35, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications