20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த "அந்த" காரியம்.. அலறிய கமுதி
கமுதியில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துவிட்டார்
ராமநாதபுரம்: ஒரே ஒரு வார்த்தைதான் காட்டமாக சொன்னார் கணவர்.. அது தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் மனைவி.. அத்துடன் தன்னுடைய 4 மாத குழந்தையையும் சேர்த்தே கொன்றுவிட்டார் அந்த 20 வயது இளம்பெண்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ளது மேல்முடிமன்னார் கோட்டை.. இங்கு வசித்து வருபவர் பொன்முருகன்.. 27 வயதாகிறது.. தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு கடந்த வருடம் கல்யாணம் ஆனது.. அதே பகுதியைச் சேர்ந்த குருதேவிதான் மனைவி.. இவருக்கு 20 வயதாகிறது.. 4 மாத ஆண் குழந்தையும் இந்த தம்பதிக்கு இருக்கிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, பொன்முருகன் வேலைக்கு சென்றுவிட்டார்.. குருதேவியின் பெற்றோரும் எங்கோ வெளியில் சென்றிருந்தனர்.. குருதேவி மட்டும் குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென குழந்தையின் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீயை வைத்து பற்ற வைத்து கொண்டார்.
உடம்பெல்லாம் தீ பரவி, குழந்தையும், குருதேவியும் அலறினர்.. அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் உடல் முழுவதும் தீயினால் குருதேவியும், குழந்தையும் கருகி சுருண்டு விழுந்து இறந்தே விட்டனர்.. இதை பார்த்து அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் கமுதி போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து தாய்-சேய் உடல்களை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து விசாரணையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அன்றைய தினம் காலையில் நடந்த சம்பவம் தெரியவந்தது. காலையில் வேலைக்கு கிளம்பும்போது, "மதிய சாப்பாட்டை சீக்கிரமா ரெடி பண்ணு" என்று பொன்முருகன், மனைவியிடம் சொன்னாராம்.. இதை கொஞ்சம் காட்டமாக சொன்னாராம்.. இதுதான் குருதேவியின் தற்கொலை & கொலைக்கு காரணம்.
கணவன் சொன்ன அந்த வார்த்தையால் மனமுடைந்து போய்விட்டார்.. அழுது கொண்டே இருந்தவர், திடீரென தற்கொலைக்கும் முடிவெடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.. இவர்களுக்கு கல்யாணமாகி ஒரு வருடமே ஆவதால், இந்த விசாரணை ஆர்டிஓக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications