நடுக்காட்டில் எலும்புகூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. சிக்கிய கொத்தனார்.. செல்விக்கு நேர்ந்த கதி
பெண்ணை நடுக்காட்டில் கொன்ற கொத்தனார் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம்: காட்டு பகுதியில் கிடந்த எலும்பு கூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. இவைகளை கண்டு அதிர்ந்தனர் போலீசார்.. இவை எல்லாமே காணாமல் போன செல்வி உடையது என்று முடிவு செய்து, கொலைக்கு காரணமான கொத்தனாரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கிராமம் சீர்தாங்கி. இங்கு வசித்து வந்த தம்பதி அருள் - அமல செல்வி. கணவரை பிரிந்து வாழ்ந்த அமல செல்விக்கு வயது 40 ஆகிறது.
இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. சில தினங்களுக்கு முன்பு செல்வி திடீரென மாயமாகி விட்டார். இதனால்,திருவாடானை போலீசில் உறவினர்கள் புகார் தரவும், விசாரணை ஆரம்பமானது. செல்வியை இந்த கொத்தனார்தான் கொலை செய்து, காட்டுப் பகுதியில் வீசி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

விபத்து
கொத்தனார் கண்ணன் போலீசில் சொன்னதாவது: "8 வருஷமாக எனக்கும் செல்விக்கும் உறவு இருந்தது.. எனக்கு ஒன்றரை வருஷத்துக்கு முன்பு ஒரு விபத்து நடந்து, உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன்.. இந்த சமயத்தில் செல்வி என்னுடன் பேசவில்லை.. என்கிட்ட பணம், பொருட்களை வாங்கி வந்த செல்வி, என்னை ஏமாற்றி விட்டாள்.. இன்னொரு ஆளுடன் உறவு வைத்திருந்தாள்.. அந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்ய பிளான் செய்தேன்.

சடலம்
பார்க்க வேண்டும் என்று சொல்லி போன் செய்து வரவழைத்தேன்.. செல்வியை சித்தானூர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன்.. ஜாலியாக இருந்தோம்.. அப்பறம் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டிலேயே சடலத்தை போட்டுவிட்டு வந்துவிட்டேன்" என்றார்.

எலும்பு கூடுகள்
இதனால் போலீசார் சடலத்தை கண்டெடுக்க கொத்தனாரை அழைத்து கொண்டு, சித்தானூர் காட்டுப்பகுதிக்கு சென்றனர். செல்வி காணாமல் போன அன்று கட்டியிருந்த ஊதா கலர் புடவை முதலில் கண்ணில் பட்டது.. இதற்கு அடுத்து செல்வியின் எலும்புக் கூடுகள் கிடைத்தது.

மண்டை ஓடு
இவைகளை கைப்பற்றிய போலீஸ், டிஎன்ஏ சோதனைக்கு செல்வியின் முடியினையும் கைப்பற்றி சேர்த்து அனுப்பினர்.. இறுதியில் எலும்புக்கூடுகள், மண்டை ஓடு, புடவை, தலைமுடி இவைகளை வைத்து, டிஎன்ஏ சோதனையும் நடந்து முடிந்து, போஸ்ட் மார்ட்டம் முடிந்த நிலையில் விசாரணை தொடர்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications