புருஷனை விட்டுட்டு வேறு ஆளை பாக்கிறயா? - இளம்பெண்ணை அடித்து எரித்துக்கொன்ற 6 பேர் கைது
ராமநாதபுரம் அருகே இளம்பெண் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரும் பெண்ணை அடித்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுள்ளது கண்டுபிடிக்கப்
ராமநாதபுரம்: கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்த பெண் ஒருவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நபருடன் நட்பாக பழகியதால் அந்தப்பெண்ணை கணவனின் உறவினர்கள் அடித்துக்கொன்று எரித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை கமுதி போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ராதிகா என்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி வல்லக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகளாவார். ராதிகாவிற்கும், பார்த்திபனூர் அருகே உள்ள பிச்சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பிரச்சினை ஏற்படவே, தனது அப்பாவின் வீட்டிற்கு வந்து விட்டார் ராதிகா. கடந்த சில ஆண்டுகளாக அப்பாவின் வீட்டில் இருந்த ராதிகா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வீட்டை விட்டு மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காமல் போகவே, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி உடல் எரிந்த நிலையில் ராதிகாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலை கைப்பற்றிய போலீசார் கமுதி அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது கொலைதான் என்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்றும் ராதிகாவின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது அதனைப் பெற்றுக்கொண்ட ராதிகாவின் பெற்றோர் உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.
ஒருவழியாக காவல்துறையினர் பெருமூச்சு விட்டாலும் ராதிகாவை கொன்றது யாராக இருக்கும் என்று தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது. ராதிகாவின் கணவரின் உறவினர்களே அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது.
அப்பாவின் வீட்டில் இருந்த ராதிகா, அதே ஊரைச்சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் அருண்குமாரின் உறவினர்கள் எச்சரித்தனர். இதை ராதிகா கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்தே ராதிகாவை அடித்து எரித்துக் கொன்றுள்ளனர்.
ராதிகா கொலை வழக்கு தொடர்பாக முருகன், மோகன், அழகர்சாமி, விக்னேஷ்வரன், பாபா, அழகர்சாமி ஆகிய 6 பேர் மீதும் கொலை, தடையங்களை மறைத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications