சென்னையில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை
சென்னையில் ஒரே நேரத்தில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு என தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: சென்னையில் ஒரே நேரத்தில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு என 14 இடங்களில் கொள்ளை நடந்தது.
மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பெண்களிடம் இருந்து தாலி செயின், செயின் பறிப்புகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவங்களில் ஆண்களுக்கும் நடைபெறுகிறது. அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் பறிக்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 14 பேரிடம் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன.
புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.
மேற்கண்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அதாவது அதிகாலை 3 மணி வரை ரூ.30 ஆயிரம் ரொக்கம், 15 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
திருவொற்றியூர், சாத்தான் காட்டு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பதிவான கேமிரா காட்சி போலீசுக்கு கை கொடுத்தது. பார்த்திபன், மணி ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வேப்பேரி பகுதியில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களும் சிக்கினர். சித்தார்த் என்ற வாலிபர் தலைமையில் அப்பகுதியில் கூட்டாக இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிட்லப்பாக்கத்தில் விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். மாங்காட்டிலும் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர். மேலும் 30 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியவில்லை.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்லுவதற்கே அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications