சேலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. 2 வாரங்களுக்கு கடும் ஊரடங்கு.. முழு விவரம் இதோ!
சேலம்: சேலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த 2 வாரங்களுக்கு மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் கொரோனா கொரானா பெருந்தொற்றைக் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படும் .
சேலம் மாநகராட்சி
1. சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள் , ஜவுளி கடைகள் , நகைக் கடைகள் , வணிக வளாகங்கள் , சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6.00 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . மேலும் , மேற்படி வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை .
2. செவ்வாய்பேட்டை மெயின்ரோடு , நாவலர் நெடுஞ்செழியன் சாலை , லாங்லி நோடு , பால் மார்க்கெட் , லீபஜார் , வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது .
3. வ.உ.சி மார்க்கெட் , சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ , பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது .
4. துணிக்கடைகள் , நகைக்கடைகள் , மால்கள் , வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது .
சேலம் ஊரகம்
1. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது . பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கோவிட் -19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் .
2. கொங்கணாபுரம் வாரச்சந்தை 23.08.2021 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது .
3. வீரகனூர் வாரச்சந்தை 23.08.2021 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது .
4. மேட்டூர் அணை பூங்கா 23.08.2021 வரை பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications