பின்னாலிருந்து வந்து.. ஓனர் செஞ்ச வேலைய பாருங்க! அப்பறம் என்ன? உறவினர்கள் செய்த வேற லெவல் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சேலத்தில் : சேலத்தில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடை உரிமையாளரை அப்பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    சேலம்: பாலியல் தொந்தரவு தந்த கடை உரிமையாளர்… நைய புடைத்த பெண்ணின் உறவினர்கள்!

    சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஜெயின் ஹித்தீஸ் என்பவர் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அக்கடையில் விற்பனையாளராக பணியாற்றிய பெண் ஒருவருக்கு கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

    கடுமையாக தாக்குதல்

    கடுமையாக தாக்குதல்

    இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சிலர் இன்றைய தினம் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். அப்போது கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயின் ஹித்திசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண், "இந்த கடையில் பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது. இந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும்" என்றார்.

    பொய் புகார்?

    பொய் புகார்?

    பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பெண் கூறிய புகாருக்கு கடையின் மேலாளராக உள்ள மற்றொரு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். கடையின் மேலாளராகப் பணியாற்றி வரும் பெண்ணிற்கும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், இதில் கடையின் உரிமையாளர் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    திடீர் பரபரப்பு

    திடீர் பரபரப்பு

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறையினர், தாக்குதல் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம் அருகேயுள்ள கடையில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+