சுடச்சுட சிக்கன் லெக் பீஸ் பிரியாணி விருந்து! எடப்பாடியில் கலக்கிய நடிகர் விஜய் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் தீபாவளியை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு சுடச்சுட சிக்கன் லெக்பீஸ் பிரியாணி வழங்கி அசத்தியிருகிறார்கள் நடிகர் விஜய் ரசிகர்கள்.

பட்டாசுகள் வெடித்தோ, இனிப்புகளை கொடுத்தோ எல்லோரையும் போல் சாதாரணமாக தீபாவளியை கொண்டாடாமல் சற்று வித்தியாசமாக ஏழை எளியோரை வயிராற பிரியாணி சாப்பிட வைத்து மகிழ்ந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே மாஸ் காட்டியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Actor Vijay fans gave chicken leg piece biryani to poor people on the occasion of Diwali.

2026ல் கப்பு முக்கியம் பிகிலு என அண்மையில் நடிகர் விஜய் பேசியதிலிருந்தே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதனால் அவரது ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும் முன்பை காட்டிலும் இப்போது அதிக உற்சாகத்துடன் வலம் வர ஆரம்பித்துள்ளனர். அவரவர் பகுதிகளில் அவரவர்கள் சக்திக்கேற்ப நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து விஜயிடம் நற்பெயர் எடுக்க போட்டிபோட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரியாணி விருந்து வைத்து கவனம் ஈர்த்துள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய் மக்கள் இயக்கத்தில் இதுவரை நடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில் இப்போது மாணவர்கள், இளைஞர்கள், பட்டதாரிகள், விவசாயிகள், என பலரையும் உறுப்பினர்களாக இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Actor Vijay fans gave chicken leg piece biryani to poor people on the occasion of Diwali.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் விஜய் மக்கள் இயக்கம் இப்போதே அதற்கு தயாராகும் வகையில் பரபரப்பாக இயக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+