செம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்!
Recommended Video

சேலம்: எம்எல்ஏ செம்மலையால் ஓங்கி குத்துவாங்கிய அதிமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தருமபுரி எம்பி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செம்மலை உடனிருந்தார்.

பிரசாரத்தின் இடையே அதிமுக தொண்டர் ஒருவர் அன்புமணியை பார்த்து 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என கேட்டார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட நிர்வாகியின் வாயில் குத்து விட்டதோடு அவரை தாக்கினார்.
இதையடுத்து போலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை பாமக தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ செம்மலை தாக்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் இன்று திமுகவில் இணைந்தார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications