அதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை
கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கும், ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பி கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சேலம்: சேலம்மாவட்டம் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னத்தம்பிக்கும், கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏ மருதமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் குணமடைந்து 8 லட்சம் பேர் வரை வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த 43 நாட்களாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது.

கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமல்லாது எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சின்னத்தம்பி எம்எல்ஏ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார். எம்எல்ஏஉடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் சோர்வாக இருந்த நிலையில் பரிசோதனை செய்த போது கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications