வாஷிங்மெஷின் பெண்கள் விடுதலைக்கான கருவி.. அடடே.. அன்புமணி ராமதாஸ் எப்படி யோசிச்சிருக்காரு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுக தருவதாக கூறிய வாஷிங் மெஷின் பெண்கள் விடுதலைக்கான கருவி என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அதிமுக வெற்றி பெற்றவுடன் அனைத்து சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் மீண்டும் முதல்வராக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலவச வாக்குறுதிகள்

இலவச வாக்குறுதிகள்

தமிழக தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. மக்களிடம் இருந்து வாக்குகளை கவர வேட்பாளர்களும், தலைவர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பதற்கு வலைவீசுவதுபோல், வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளை இழுக்க திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சலுகைகள், இலவசங்களை அள்ளித் தெளித்துள்ளன.

வாஷிங்மெஷினுக்கு அமோக வரவேற்பு

வாஷிங்மெஷினுக்கு அமோக வரவேற்பு

இரு கட்சிகளும் பெண்களை குறி வைத்து குடும்ப தலைவிகளுக்கு மாத ஊக்கத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை செய்திருந்தாலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வீடுகளுக்கும் இலவச வாஷிங்மெஷின் பெண்களிடத்தில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இதனை வைத்தே பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. இந்த நிலையில் அதிமுக தருவதாக கூறிய வாஷிங் மெஷின் பெண்கள் விடுதலைகான கருவி என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பெண்கள் விடுதலைக்கான கருவி

பெண்கள் விடுதலைக்கான கருவி

இது தொடர்பாக குமாரபாளையம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- அதிமுக தலைமையிலான கூட்டணி சமூகநீதி கொண்ட கூட்டணி ஆகும். அதிமுக வெற்றி பெற்றவுடன் அனைத்து சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இலவச வாஷிங் மெஷின் திட்டத்தை பெண்களின் விடுதலைக்கான கருவியாக பார்க்கிறேன்.

விவசாயி முதல்வராக வேண்டும்

விவசாயி முதல்வராக வேண்டும்

மேலும், அதிமுக அறிவித்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்ப்படும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டும் என்பதை அடிப்படியாகக் கொண்டது. 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் மீண்டும் முதல்வராக அதிமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+