என்ன பெரிய பைசன், ட்யூட்! எல்லாத்தையும் விட தீபாவளிக்கு டாஸ்மாக் வசூல் தான் அதிகம்! அன்புமணி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சேலம்: இந்த தீபாவளியின் போது பைசன், டியூட் என்று பல படங்கள் ரிலீஸ் ஆனது. அவற்றை விட அதிக கலெக்ஷனை எடுத்தது டாஸ்மாக் தான் எனவும், தமிழ்நாடு டாஸ்மாக் இந்த தீபாவளிக்கு 789 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை திமுக அரசிடம் மாட்டிக் கொண்டு படுமோசமாக இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற பெயரில், 100 நாள் பிரசாரம் மேற் கொண்டுள்ளார். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூரில் பயணம் மேற்கொண்ட அன்புமணி பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்," சாதி இல்லாத சமுதாயத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று முதலமைச்சர் சொல்கிறார். உண்மையிலேயே ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அதன் மூலமாக இன்னும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காத மக்களை கண்டறிந்து அவர்களை முன்னேற்ற முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்.

Anbumani Ramadoss DMK TASMAC

அன்புமணி ராமதாஸ்

சாதியால் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளை வேற்றுமைகள் அழிக்கப்பட வேண்டும். சினிமாவில் ஜாதி இல்லை என்று சொன்னால் ஜாதி ஒழிந்து விடுமா? சாதிப் பெயரை சாலையில் இருந்து எடுத்து விட்டால் சாதி ஒழிந்து விடுமா? அனைவருக்கும் கல்வியும் வேலை வாய்ப்பு கொடுத்து சுயமரியாதையோடு வாழ வைப்பது தான் உண்மையான சமூக நீதி. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதனை செய்ய வேண்டும். சென்னை போன்ற மாநகரங்களில் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. அதனால் அங்கு சாதி சண்டைகள் உருவாவதில்லை.

வேலைவாய்ப்பு பிரச்சனை

ஆனால் தென் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அதன் காரணமாக அங்கு சாதி சண்டைகள் உருவாகிறது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தான் அதிக அளவில் போதைக்கு அடிமை ஆகிறார்கள்.

இளைஞர்கள் போதை பழக்கம்

இந்தியாவிலேயே அதிகமான போதை பொருட்கள் புழங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது வெட்கக்கேடு. காவல்துறைக்கும் இது நன்றாக தெரியும். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்படுத்தக்கூடிய மாணவர்களுடைய எண்ணிக்கை 9 விழுக்காடாக இருந்தது தற்போது அது 15 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதாவது 25 லட்ச மாணவர்கள் தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையாகி விட்டார்கள்.

தீபாவளி சாதனை

இந்த தீபாவளியின் போது பைசன் டியூட் என்று பல படங்கள் ரிலீஸ் ஆனது அவற்றில் அதிக கலெக்ஷனை எடுத்தது டாஸ்மாக் தான். தமிழ்நாடு டாஸ்மாக் இந்த தீபாவளிக்கு 789 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மூன்றே நாட்களில் எவ்வளவு மது விற்பனையாக இருக்கிறது. இதனை சிரிப்பதற்காக சொல்லவில்லை. உண்மையில் நமது நிலைமை எப்படி இருக்கிறது என சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை திமுக அரசிடம் மாட்டிக் கொண்டு படுமோசமாக இருக்கிறது" என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+