தட்டு வடை வாங்கி தின்ற நட்டு! அஜித் வைத்த ட்ரீட்! சேலத்தில் ஜோடி போட்டு சுற்றிய கிரிக்கெட் வீரர்கள்!
சேலம்: கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் சென்று சொந்த ஊர் சேலத்திற்குப் போய் தட்டு வடை சாப்பிட்டு தனது பழைய நினைவுகளை அசைப்போட்டு பேசியுள்ளார் நட்டு. அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவரது யூடியூப் தளத்தில் நடராஜனுடன் அவரது சொந்த ஊருக்குப் போய் சுற்றிப் பார்த்த வந்த அனுபவங்களைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சேலம் நகரில் 52 வருடங்களாகத் தட்டு வடை விற்கும் விற்பனையாளரை ஒரு குளத்தங்கரையில் வைத்துச் சந்தித்து விதவிதமான சுவைகளில் கிடைக்கும் தட்டு வடையை ருசித்துச் சாப்பிட்டுள்ளனர்.

அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவின் தலைப்பே 'தட்டு, செட்டு, நட்டு’ என்று ரைமிங்காக வைத்து அசத்தியுள்ளார். வீடியோவில் இந்த மாதிரியான தட்டு வடையை இதற்கு முன்னால் சாப்பிட்டு இருக்கிறீர்களா என நடராஜை பார்த்து அஸ்வின் விசாரிக்க, உடனே நடராஜ், 'கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் சாப்பிட்டது இல்லை’ என்று கூறியுள்ளார்.
இதை சாப்பிடும்போது அஸ்வினை பார்த்து டயட் எல்லாம் கடைப்பிடிக்கிறீர்களா? என்று நட்டு கேட்க, அவர் தலையாட்டியவுடன் 'நான் டயட் பற்றி எல்லாம் எதையுமே யோசிப்பதே இல்லை’ என்று சொல்லி இருக்கிறார் நட்டு. உடனே தட்டு வடை விற்பவரைப் பார்த்து உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார் என அஸ்வின் கேட்க, அவர் கூச்சத்தில் நெளிந்தார். உடனே நட்டுவைப் பார்த்து 'உனக்குப் பிடித்த ஹீரோ யார்? ' என்றதும் 'ரஜினிதான் எனக்குப் பிடித்த ஹீரோ’ என்றார் நட்டு. அதற்கு அஸ்வின், 'ரஜினி எல்லாம் போன தலைமுறை. நம்ம தலைமுறை அஜித், விஜய்தான். அது சரி, நீ இப்போ தலயை பார்த்த இல்லையா?” என்றதும். 'இந்த வருஷம் பர்த்டேவை அவருடன் தான் கொண்டாடினேன். அவரை பெங்களூரில் சந்தித்தேன். முதன் தடவை பார்ப்பது போல இல்லை. அப்படி இயல்பாகப் பழகினார் அஜித். கடைசியாக சப்ரைஸ் ஆக கேக் வாங்கி வர சொல்லி என்னை வெட்டச் சொன்னார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்று கூறியுள்ளார் நடராஜன்.
மீண்டும் நான் முன்பே எந்த விக்கெட்டை எல்லாம் எடுக்க ஆசைப்படுகிறேன் என்று கேட்டிருந்தேன். அதில் இதுவரை எந்த விக்கெட்டை எல்லாம் எடுத்து இருக்கிறாய்? என அஸ்வின் கேட்க, 'நான் அந்தப் பேட்டியில் சொன்ன அனைத்து விக்கெட்டையும் எடுத்துவிட்டேன். கோலி, தோனி, ருஸ்சேல், ஏபி டே வில்லியஸ் என அத்தனைப் பேரையும் எடுத்துவிட்டேன்’ என்று பதிலளித்தார் நட்டு.
அப்போது அஸ்வின் மூன்று ஃபார்மெட்டில் ஒரே சீரியஸ்ல விளையாடிய ஒரே வீரர் நீதான் அது உனக்கு தெரியும் இல்லையா? என்றார் அஸ்வின். அதற்கு, 'எனக்குத் தெரியாது அண்ணா. பலர் சொன்ன பிறகுதான் எனக்கே தெரியும்' என்று பதிலளித்தார் நட்டு.
நட்டு சேலத்துக்காரர். ஆனால், இதுவரை தட்டு வடை சாப்பிட்டதே இல்லை. ஆகவே அவரை அழைத்து கொண்டு போய் தட்டு வடை சாப்பிட வைத்திருக்கிறார் அஸ்வின். கூடனே சத்தியநாராயணன் அண்ணனின் தட்டுவடைக் கடை வாசி மஹால் பின்புறம் உள்ளது. அங்கே போனால் சாப்பிடலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ போட்ட வேகத்திலேயே இதுவரை 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து போய் கொண்டிருக்கிறது. இதே வீடியோவில் அஸ்வின் ஒரு புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதாவது அவர் ஊர் ஊராகப் போய் கோன் பனேகா கிரிக்கெட் பதி என்ற நிகழ்ச்சியை செய்ய உள்ளாராம். அதில் பொதுமக்களுக்கு கிரிக்கெட் பற்றி எந்தளவுக்கு அறிவு உள்ளது என்பதை சோதிக்கப் போகிறாராம். அதற்கு முன்பாக நட்டுவை நிற்கவைத்து சில நறுக் கேள்விகளை அஸ்வின் கேட்டு விடைகளைப் பெற்றுள்ளார்.
மேலும் வாழ்க்கையில் பெற்றோர்கள் எதையுமே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக் கூடாது. அவர்கள் விரும்புவதை எப்படி வாங்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு அந்த கஷ்டம் தெரியும். அப்படிக் கஷ்டப்பட்டு வந்தவர் தான் நடராஜன். அவரை விடச் சிறந்த உதாரணம் இதற்கு வேறு யாரையும் சொல்லவே முடியாது என்று நட்டுவைப் பற்றி அஸ்வின் பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications