இந்த தேர்தல் பாஜகவிற்கும் திமுகவிற்கும்.. இடையே நடைபெறும் யுத்தம்.. திருமாவளவன் பேச்சு
சேலம்: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் என்று குறிப்பிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் அதிமுக அடகு வைத்துள்ளது, அதை மீட்க நடைபெறும் தேர்தல் இது என்று அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடைபெறும் சராசரி தேர்தலாக இதை பார்த்துவிட வேண்டாம். இந்தத் தேர்தல் வருகாலத்தைக் காப்பதற்கு நடைபெறும் தேர்தல். தமிழகத்தை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் அதிமுக அடகு வைத்துள்ளது, அதை மீட்க நடைபெறும் தேர்தல்தான் இது.

அதிமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். பேரம் பேசி அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்படியல்ல. நாடாளுமன்ற தேர்தலிலிருந்து ஒன்றாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிஏஏ, விவசாய சட்டங்கள் போன்றவற்றில் இணைந்து போராடியுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு ஒரு அங்குலம் கூட வளர்ச்சி அடையவில்லை. திமுக கூட்டணிக்கு எதிராக நிற்கும் வலுமை அதிமுகவிற்கு இல்லை. அதிமுக நீர்த்துப் போய்விட்டது, பாமக விலை போகிவிட்டது. அதிமுக முகமூடியைக் கொண்டு தமிழ்நாட்டில் நுழைய பாஜக முயல்கிறது. அதிமுக, பாமக என்று யாருக்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கே செல்லும்.
இந்தத் தேர்தல் பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடைபெறும் யுத்தம். தமிழ்நாட்டில் மதவாதத்தைப் புகுத்தி மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயல்கிறது. தமிழ்மொழி, தமிழ் இனம், சமூக நீதி, ஜனநாயகம் என்று அனைத்தையும் காக்க நடைபெறும் தேர்தல் இது.
ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார். தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்தியாவையே பாதுகாக்க அச்சாரமாக இந்தத் தேர்தல் அமையும்" என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
காலரில் என்னங்க இது.. அமைச்சரானதும் வன்னியரசும் இப்படி இறங்கிட்டாரே.. விசிகவிற்கு இது புதுசு












Click it and Unblock the Notifications