அன்னைக்கு 5 ரூபாய் சொன்னாங்க..பெட்ரோல் விலை வெறும் ரூ.3 குறைப்பு.. அப்ப டீசல்?.. எல்.முருகன் கேள்வி
பாஜகவை புகழ்ந்து எல்.முருகன் சேலத்தில் பேட்டி தந்துள்ளார்
சேலம்: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர பெரும்பாலான மாநிலங்கள் தயாராக இல்லை... பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்பதாக கூறிய திமுக 3 ரூபாய் குறைத்துள்ளது... ஆனால், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக முன்னதாகவே தயாராகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில் பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளது..
அதன்படி, மக்கள் ஆசி யாத்திரையை துவக்கியது.. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவே இந்த யாத்திரை நடந்தது.. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் யாத்திரை நடந்து முடிந்தது.

பேட்டி
இறுதியாக, சேலம் கோட்டையில் நடந்த யாத்திரை கூட்டத்தில் முருகன் பேசியதாவது: மத்திய அமைச்சரவையில் முதல் தலைமுறை அரசியல்வாதிகளை அமைச்சர்களாக பொறுப்பேற்க வைத்த பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார்... அதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்காமல் அமளி செய்ததால் மக்களிடையே ஆசி வாங்க இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.

வாய்ப்பு
3 நாட்களில் 169-வது நிகழ்ச்சியாக சேலத்தில் நிறைவடைகிறது... தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும், மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் வாய்ப்பளித்த பிரதமருக்கும் சேலம் மக்களுக்கும் நன்றி, நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்" என்றார்.

எல்.முருகன்
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் முருகன் பேசும்போது, "மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது... மத்திய அரசு அறிவித்த 2 ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்தரபிரதேசத்திற்கும், இன்னொன்று தமிழகத்திற்கும் ஒதுக்கப்பட்டது... மீன் வளத்துறை சார்பில் சென்னையில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ. 3 லட்சம் கோடியில் அமைக்கப்பட உள்ளது.

மீன்வளத்துறை
மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது... மேலும் பல நிதி ஒதுக்கீடு என ஒட்டுமொத்தத்தில் மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் நம் மாநிலம் பலன் அடைந்திருக்கிறது.. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர பெரும்பாலான மாநிலங்கள் தயாராக இல்லை...
Recommended Video

வாக்குறுதிகள்
பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்பதாக கூறிய திமுக 3 ரூபாய் குறைத்துள்ளது... ஆனால், டீசல் விலை குறைக்கப்படவில்லை.. மகளிருக்கு மாதந்தோறும் 1000 உதவித்தொகை, பயிர்க்கடன், கல்விக்கடன் ஆகிய வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான விவரங்கள் பட்ஜெட்டில் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications