சூரஜ் இறந்து 24 மணி நேரமாச்சு! ஒரு இரங்கல் கூட இன்னும் தெரிவிக்காத விஜய்! ப்ளூசட்டை மாறன் விமர்சனம்
சேலம்: சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சூரஜ்ஜின் இறப்புக்கு ஒரு இரங்கல் கூட இன்னும் தவெக தலைவர் விஜய் தெரிவிக்கவில்லை என ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரம் போல் சுழன்று வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் சீலநாய்க்கன்பட்டியில் விளையாட்டு திடலில் தவெக நிர்வாகிகள் குழு கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு 5000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு பாஸ் வழங்கப்பட்டது. அந்த பாஸ் இருப்போர் மட்டுமே கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்திற்கு 8 ஆயிரம் பேர் வந்ததாக சொல்கிறார்கள்.
பலர் கலர் ஜெராக்ஸ் போட்ட போலி பாஸை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மதியம் 1 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய்யை கிட்டத்தில் இருந்து பார்க்க காலை 10 மணி முதலே பலர் திடலுக்குள் சென்றுவிட்டனர்.
இதனால் 3 மணி நேரமாக நாற்காலி கூட இல்லாமல் நின்றுக் கொண்டே இருந்தனர். அப்போது விஜய் மதியம் 1 மணிக்கு வந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த போதே வெயிலின் தாக்கத்தால் பலர் மயங்கி விழுந்தனர்.
அதில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சூரஜ் என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். சூரஜின் உடலை பார்த்து மனைவி பிரியங்கா கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
இந்த நிலையில் சூரஜ்ஜின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூரஜின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது " அவருக்கு 5 வயதில் மகன், 10 வயதில் மகள் உள்ளனர். அவர் நல்லாதான் இருந்தார்.
அவர் தவெகவில் இல்லை. சூரஜ்ஜின் இறப்புக்கு தவெகவினர் நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லை. விஜய் அறிக்கையில் கூட தெரிவிக்கவில்லை, சூரஜ்தான் தனது குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டி வந்தார்.
தற்போது அவர் உயிரிழப்பால் அந்த குடும்பமே கலங்கி போயிருக்கிறது. எனவே கட்சி சார்பில் அந்த குடும்பத்திற்கு நிதியுதவி கொடுக்கவேண்டும். அதுவரை சூரஜ் உடலை பெறமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ப்ளூசட்டை மாறன், ஒரு இரங்கல் கூட இன்னும் தெரிவிக்காத 'தலைவர்'. என விமர்சித்துள்ளார். அது போல் பலரும் விஜய்யை விமர்சித்து வருகிறார்கள். இதுவரை விஜய் கலந்து கொண்ட கூட்டங்களில் 50 பேர் வரை பல்வேறு காரணங்களால் மரணமடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்












Click it and Unblock the Notifications