அதிமுகவில் இணைந்தார் அய்யாதுரை பாண்டியன்! ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த எடப்பாடி பழனிசாமி!
சேலம்: தென்மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியனை அதிமுகவில் இணைத்ததன் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாயத்தை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் அய்யாதுரை பாண்டியனுக்கு உள்ள செல்வாக்கை அறிந்து அவரை பாஜக வளைக்க பார்த்த நிலையில் பக்காவாக காய் நகர்த்தி தனது படைக்குள் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அய்யாதுரை பாண்டியன்
தென்காசி மாவட்டத்தில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கை கொண்டிருப்பவர் அய்யாதுரை பாண்டியன். தொழிலதிபரான இவர் திமுகவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்து பல கோடிகளை கட்சிக்காக கரைத்தவர். குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது ஸ்டாலின் கட்டளையை ஏற்று ஊர் ஊராக சொந்த நிதியில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கியவர். இதுமட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் ஏழை எளிய வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி வருகிறார்.

மக்கள் அறிமுகம்
இப்படி கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் அறிமுகத்துடன் திகழும் இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் இல்லை என்ற நிலை வந்த போது அமமுகவில் இணைந்தார். அங்கு டிடிவி தினகரனின் நடவடிக்கைகளும், மாணிக்கராஜாவின் போக்கும் இவருக்கு பிடிக்காததால் அங்கிருந்தும் வெளியேறி தான் உண்டு தனது தொழில் உண்டு என்று சில காலம் இருந்து வந்தார். ஆனால் அய்யாதுரை பாண்டியன் பேரவை என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக அவரது சமுதாயத்தை சேர்ந்தவரும், தென் மாவட்டங்களில் ஓரளவு பரிச்சயம் உள்ளவருமான அய்யாதுரை பாண்டியனை அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரது தூதுவர்களாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று எடப்பாடியிடமே போனை போட்டு அய்யாதுரை பாண்டியன் கையில் கொடுத்தனர்.

இசக்கி சுப்பையா
அப்போது சில பல கோரிக்கைகள் அய்யாதுரை பாண்டியன் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த டீல் இழுத்துக் கொண்டே இருந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (இவர் திருநாவுக்கரசர் சம்பந்தி) மூலம் அது ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து இனியும் தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி, அய்யாதுரை பாண்டியனை நேராக தனது சேலம் வீட்டுக்கே அழைத்து வருமாறு இசக்கி சுப்பையாவிடம் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
அதன்படி விஜய தசமியான இன்று அரசியலில் புதுக் கணக்கை ஆரம்பித்து எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளார் அய்யாதுரை பாண்டியன். அவருடன் 10,000 பேர் இணையவுள்ள நிலையில் அவர்களுடைய பெயர் விவரங்களுடன் கூடிய பட்டியல் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. விரைவில் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தயாரானதும் தென் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவை எடுக்க திட்டமிட்டுள்ளார் அய்யாதுரை பாண்டியன்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications