தாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி
பைக் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வைரலாகிறது
Recommended Video
சேலம்: அப்பதான் கல்யாணத்துக்கு போய்விட்டு வந்திருந்தனர்.. வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது, தறிகெட்டு ஓடிய மஞ்சள் கலர் கார் ஒன்று வேகமாக மோதிவிட்டது.. இந்த சிசிடிவி காட்சிதான் வைரலாகிறது!
சேலம் அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்த தம்பதி ஹரி - தவமணி... தவமணிக்கு 24 வயதாகிறது!!
கடந்த 2-ந் தேதி இவர்களது சொந்தக்காரர் ஒருவருக்கு அம்மாபேட்டையில் திருமணம் நடந்தது.. அந்த கல்யாணத்துக்கு போய்விட்டு ஹரி, தவமணி, அவரது குழந்தைகள், அவரது தம்பி பிரகாஷ் ஆகியோர் சென்றிருந்தனர்.

2 பைக்குகள்
கல்யாணத்தை முடித்து கொண்டு 2 பைக்கில் வீட்டுக்கும் திரும்பி வந்துவிட்டனர்... ஆனால் வீட்டு வாசலிலேயே 2 பைக்குகளில் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மஞ்சள் கலர் கார் வேகமாக வந்தது.. அதே பகுதியை சேர்ந்த சுதர்சனன், அவரது நண்பர் கமலக்கண்ணன் 2 பேரும் அந்த காரில் இருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டினார்.

உயிர் தப்பினர்
திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக தெருவில் ஓடியது... அப்படியே வந்து பைக்கில் உட்கார்ந்திருந்த இருந்த ஹரி, நின்று கொண்டிருந்த மனைவி தவமணி, குழந்தைகள் மீது மோதியது. இதில் எல்லோருமே மொத்தமாக கீழே விழுந்தனர்.. ஹரி, தவமணி காயத்துடன் உயிர் தப்பினர். குழந்தைகளுக்கு காயம் எதுவும் இல்லை.

தீவிர சிகிச்சை
இதில் விழுந்த வேகத்தில், தவமணி மட்டும் காரின் முன்பக்க டயரில் சிக்கி கொண்டார்... அதற்குள் காரில் இருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து கீழே விழுந்த தவமணியை டயருக்குள் இருந்து மீட்டனர். தம்பதியை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தவமணியின் காலில் மட்டும் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.. தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது. இந்த விபத்து அங்கிருந்த ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.

குடிபோதை
இதனை சோஷியல் மீடியாவில் இப்போது பதிவிடவும் அது வைரலாகி வருகிறது. அந்த காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்று முதலில் காரணம் சொன்னார்கள்... ஆனால் அம்மாபேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், கமலக்கண்ணன் தண்ணி அடித்துவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.. அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். தறிகெட்டு ஓடிவந்த கார், குடும்பத்தினர் மீது மோதும் இந்த சிசிடிவி காட்சி வைரலாகிறது!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications