Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பளபளக்கும் புத்தம் புதிய 244 மாடி வீடுகள்.. இலங்கைத் தமிழர் வாழ்வில் ஸ்டாலின் செய்த மறுமலர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சேலம்: இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான் இலங்கைத் தமிழர் நலன் மீது புதிய அக்கறை பிறந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே 'அகதிகள் முகாம்' என்ற வார்த்தையை 'மறுவாழ்வு மையம்' என்று மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

உடனே பலர் சொன்னார்கள் பெயர் பலகையை மாற்றிவிட்டால், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மாறிவிடுமா என்று. அதற்குத் தன் தரமான செயல் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

ஏறக்குறை 217 கோடி நிதி அவர்களின் நலனுக்காக ஒதுக்கி இருந்தார் ஸ்டாலின். அதன் பலனாக இன்று சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்குச் செயல்பட்டு வந்த தகரக் கொட்டகைகள் முகாம் இன்று ஹைடெக் சிட்டியாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

ஆம்! இந்த மக்களுக்காக ஏறக்குறை 244 புத்தம் புதிய வீடுகளைக் கட்டித் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கான விழா விரைவில் வெளிச்சம் பெற உள்ளது.

தகரக் கொட்டையில் தவியாகத் தவித்துவந்த நம் சொந்தங்கள் இனி, அழகான கான்கிரீட் வீடுகளுக்குள் கால்வைக்க உள்ளார்னர். இருண்டு போன வாழ்க்கையிலிருந்து இனிமையான வாழ்க்கைக்கு அந்த மக்கள் மாறப்போகிறார்கள்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

எப்படி இருக்கின்றன வீடுகள்? என்ன நினைக்கிறார்கள் மக்கள்? நம் கேள்விகளுக்கு முதன்முதலாக முகம் காட்டினார் 32 வயதான இளைஞர் யானதன்.

"எனது தாய், தந்தையர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். நான் தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் காலத்தில் நான் பள்ளியில் படிக்கவும் அது தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்வதும் பெரிய சவாலாக இருந்தது.

அதன்பிறகு தமிழ்நாட்டு மாணவர்களைப் போல எங்களுக்கும் உரிய உரிமைகள் கிடைக்கத் தொடங்கின. ஆகவே பழைய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. இன்றைய காலத்தில் எங்கள் பிள்ளைகளில் இரண்டு பட்டங்களைப் பெற்றவர்கள் ஏறக்குறைய 500 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

இந்நிலையில்தான் 2021இல் கொரோனா காலகட்டத்தில் திமுக ஆட்சி வந்தது. அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி 217 கோடி ரூபாய் நிதியை எங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கினார். அதனால், எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்துவந்த கல்வி உதவித்தொகை இப்போது 3 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மேற்படிப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

அதைப்போலவே தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைப்பதைப் போலவே எங்கள் பெண்களுக்கும் சுய உதவிக்குழு நிதியை அதிகரித்துள்ளார்கள். குடியுரிமை வேண்டும் என்பது எங்களது நீண்டகாலக் கோரிக்கை. அதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் தனிக்குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். அதில் எங்கள் மக்களையும் உறுப்பினராக இணைத்துள்ளார்.

இதை எல்லாம் தாண்டி நாங்கள் 40 வருடங்களுக்கு மேலாக 10க்கு 10 வீட்டில்தான் வாழ்ந்துவருகிறோம். அதிலும் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. பொதுக்கழிப்பிடம்தான் உள்ளது. தனியாகக் கழிப்பறை வசதிகள் இல்லை. அதனால் சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்பட்டுவருகின்றன. இந்தக் கஷ்டங்களை எல்லாம் நாங்கள் தொடர்ந்து அரசுக்குச் சொல்லி வருகிறோம்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

அதை ஏற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்கு முன், அருகில் உள்ள பாம்பம்பாடி என்ற கிராமத்தில் எங்களது இலங்கைத் தமிழ் மக்களுக்காக 234 புதிய வீடுகளை முதல்வர் ஸ்டாலின் கட்டித் தர உத்தரவிட்டார்.

அதில் எங்களுக்குப் படுக்கையறை, சமையல் அறை, தனி கழிப்பறை, குடிநீர் வசதி, எங்கள் பகுதியில் நூலகம், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, தண்ணீர் தொட்டி, சமுதாயக் கூடம் எனப் பல அடிப்படை வசதிகளுடன் அந்த வீடுகளைக் கட்டி வருகின்றனர். அதற்கான பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

இந்த வீடுகளைப் பார்க்கும்போதே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வாழ்க்கை நரகத்தில் இருப்பதைப் போன்று இருந்தது. மழைக்காலம் என்றாலும் வெயில் காலம் என்றாலும் அது எங்களுக்குக் கஷ்ட காலமாகவே இருந்து வந்தது. ஒரு நிம்மதியான உறக்கம் இல்லாமல் வாழ்ந்துவந்தோம். அதை எல்லாம் இந்தப் புதிய வீடு மாற்றப் போகிறது" என்றார்

அடுத்து கவிதா நாகநாதன், "நான் இந்த முகாமில் கடந்த 32 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறேன். எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் இறந்துவிட்டார். 2 பிள்ளைகளைப் படிக்க வைத்தது, கல்யாணம் கட்டிக் கொடுத்தது எல்லாம் இந்த முகாமில்தான். ஒரு பையனுக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை. அவன் வேலைக்குச் சென்றுவருகிறான்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

சில மாதங்கள் முன்பாக வந்த மழையில் எங்கள் பழைய முகாமில் தண்ணீர் புகுந்துவிட்டது. பல வீடுகளில் வெள்ளம் வந்துவிட்டது. அப்போது, மழைக்காலம் என்பதால் பாம்பு, பூச்சிகள் எல்லாம் வீட்டுக்குள் வந்துவிட்டன. இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் தவித்தோம்.

இப்போது முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு என்று சிமெண்ட் வீடுகளைக் கட்டித் தந்துள்ளார். நாங்கள் இப்படிப்பட்ட வீடுகளில் வாழ்வோம் என்று நினைத்துக் கூடப்பார்த்ததில்லை. அந்தளவுக்கு தனித்தனி வீடுகளைக் கட்டித்தந்துள்ளார்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

நாங்கள் இந்த 32 ஆண்டுகளாக ஒரே முகாமில் ஒட்டுமொத்தமாக வாழ்ந்துவந்தோம். யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று இல்லை. சாப்பிடுவது தொடங்கி கழிவறைக்குச் செல்வது வரை எல்லாம் ஒன்றுதான். அதை எல்லாம் தாண்டி இன்றைக்குத் தனி வீட்டுக்குப் போகப் போகிறோம். அதில் சகல வசதிகளும் இருக்கின்றன.

இத்தனைக் காலம் ஓலைக் குடிசைபோல இருந்த வீட்டில் வாழ்ந்தோம். அந்தக் கஷ்டம் எல்லாம் சொல்ல ஒரு நாள் போதாது. படாத கஷ்டம் இல்லை. அனுபவிக்காத துயரம் இல்லை. அப்படியே எங்கள் பாதி ஆயுள் கரைந்துவிட்டது" என்கிறார் பெருமூச்சை விட்டபடி.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

இவரைத் தொடர்ந்து தர்ஷினி, "எங்கள் குடும்பம் 1990இல் இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்தது. அப்போது நான் 6 மாதக் குழந்தை. நான் படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான். இத்தனை வருடங்களாக நாங்கள் கஷ்டத்தில்தான் வாழ்ந்தோம். இப்போது ஸ்டாலின் அய்யா ஆட்சியில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.

எங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள நலத்திட்டங்கள் எல்லாம் கலைஞர் ஆட்சியில்தான் கிடைத்திருக்கிறது. அவருக்கு அடுத்து இப்போது அதே அளவுக்கு ஸ்டாலின் பல உதவிகளைச் செய்துவருகிறார்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

இந்த வீடு கட்டிக் கொடுத்த விஷயத்தில் ஸ்டாலின் எல்லோரையும்விட பல மடங்கு எங்கள் மனதில் உயர்ந்துவிட்டார். இவ்வளவு காலம் எங்களை அகதி என்று சொல்லி வந்தார்கள். அவர் ஆட்சியில்தான் மறுவாழ்வு மையம் என மாற்றி இருக்கிறார்கள். ஒரு வார்த்தைதான். ஆனால், அது தந்த வலி என்பதை உங்களுக்குப் புரியவைக்க முடியாது.

அவருக்கு எங்கள் முகாம் மக்களின் சார்பாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் செய்த உதவிக்கு இந்த வார்த்தை எல்லாம் கொஞ்சம் கம்மிதான்" என்கிறார்.

தன் ஆயுளில் முக்கால்வாசியைக் கழித்துவிட்ட பாட்டி ரீட்டா, "நாங்கள் மூன்று தலைமுறைகளைக் கூட பார்த்துவிட்டோம். எங்கள் காலம் எல்லாம் போய்விட்டது. ஒருநாள் நிம்மதியாகப் படுக்கக் கூட இடமில்லாமல் வாழ்ந்து கழித்திட்டோம். சுகாதாரம் இல்லாமல் எத்தனை நோய் நொடிகளைக் கண்டுவிட்டோம்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

இனிமேல் எங்களைப் போல யாரும் வாழக் கூடாது. அவ்வளவு இன்னல்கள். அவ்வளவு துயரங்கள். இப்போது இந்தப் புதிய வீடுகளைப் போய் பார்த்தேன். பார்க்கும் போதே மனத்திற்குள் அவ்வளவு நிம்மதி. அதை ஸ்டாலின் அய்யாதான் செய்து தந்துள்ளார்.

பல உதவிகள் பலர் செய்யலாம். வீடுதான் முக்கியம். காக்கை கூட தனி கூடு இருக்கிறது. இந்த மனிதக் கூட்டமான எங்களுக்கு என்று தனி வீடு இல்லை. பெண்டு பிள்ளைகள் என எல்லாம் ஒரே அறையில் கிடந்தோம். காலைகூட கொஞ்சம் தாராளமாக நீட்ட முடியாது. கொசுக் கடி, துர்நாற்றம் என எத்தனை எத்தனை?" என நம் கண்களை தன் பேச்சால் ஈரமாக்குகிறார் பாட்டி.

"இத்தனை ஆண்டுகளாக பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்துவந்தார்கள். இந்த மக்களுக்காக பாப்பம்பாடி பஞ்சாயத்தில் இடம் தேர்வு செய்து 244 குடியிருப்புகளைக் கட்டி தந்துள்ளோம். இதில் அத்திக்காட்டானூர் முகாம் மக்களுக்கு 55 வீடுகள், பவளத்தானூர் முகாம் மக்களுக்கு 80 வீடுகள், குறுக்குப்பட்டி முகாம் மக்களுக்கு 109 வீடுகள் என அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.

வீடுகளின் தரைக்கு டைல்ஸ் போட்டுள்ளோம். அதைப்போலக் கழிப்பறைகள் கூட டைல்ஸ் வசதிகள் கொண்டவை. கின்சன், தனி அறை, ஒரு ஹால், வீட்டுக்கு உள்ளாகவே கழிப்பறை, குளியல் அறை பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம். ஜன்னல்கூட இந்தக் காலத்திற்கு ஏற்ப நவீன மாடலில் அமைத்துள்ளோம்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

முறையான சாலை வசதி, மின்சார வசதி, தனித்தனி குடிநீர் குழாய் இணைப்புகள் எனச் செய்து தந்துள்ளோம். வீட்டுக்கு முன்பாக நடைபாதைக்கு 20 அடி தெரு அமைத்துள்ளோம். அதுவும் சிமெண்ட் சாலையுடன் அமைத்துள்ளோம்.

 CM Stalin has built 244 new houses for Sri Lankan Tamils in Salem

வீடுகளைத் தவிர்த்து அங்கன்வாடி மையம், பொது நூலகம், இந்த மக்களுக்காகவே நியாயவிலைக்கடைக்கு என்று தனிக்கட்டடம், மகளிர் சுய உதவிக்குழுவுக்காக ஒரு தனிக் கூடம், மொத்தமாக 100 மின் விளக்குகள் எனப் பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம்" என்கிறார் தாரமங்கலம் பகுதி உதவிப் பொறியாளர் ஸ்ரீநிவாசன்.

இந்த 2 ஆண்டுகள் ஸ்டாலின் ஆட்சியில்தான் எத்தனை சாதனைகள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+