“5 லட்ச ரூபா வீட்டை ஸ்டாலின் தந்திருக்கார்..” நரிக்குறவ மக்கள் நெகிழ்ச்சி..
சேலம்: மிகுந்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வாழும் நரிக்குறவ இன மக்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் எட்டிவிட்ட நிலையில், இப்போதுதான் இந்த மக்களுக்கு என்று ஒரு நிரந்தரமான முகவரி கிடைத்துள்ளது.

பல ஆண்டுகளாக அவர்களை நரிக்குறவர் என மக்கள் குறிப்பிட்டு வந்தாலும், அவர்கள் இந்த சாதிதான் என்று சொல்லிக் கொள்ளமுடியாமல், சாதி சான்றிதழ் கிடைக்காமல் திண்டாடி வந்தார்கள் இந்த மக்கள்.
அந்த மக்களுக்கு வரலாற்றில் முதன்முறையாக நரிக்குறவர் இன மக்கள் எனச் சாதிச் சான்றிதழைப் பெற்றுத் தந்ததுடன், அவர்களைப் பழங்குடி இனப் பட்டியலுக்கும் மாற்றிக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அது மட்டுமல்ல, சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாகக் குப்பை மேட்டில் வாழ்ந்துவந்த அந்த மக்களை அழகான கல் வீட்டிற்குள் வாழ வசதி ஏற்படுத்தித் தந்துள்ளார் ஸ்டாலின்.
ஏறக்குறைய 60 குடும்பங்கள் இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்குப் பிறகு புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறார்கள்.

"பலரும் எங்களை எம்.ஜி.ஆர். கட்சி என ஒதுக்கியே வைத்துவிட்டார்கள். ஆனால், எங்களுக்கு முதன்முதலாகப் பட்டா கிடைத்தது கலைஞர் அய்யா ஆட்சியில்தான். இப்போது நாங்கள் கல் வீட்டில் வாழப் போவதும் ஸ்டாலின் அய்யா ஆட்சியில்தான். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் சாமீ" என்கிறார் இந்த நரிக்குறவ இனத் தலைவர் பார்த்திபன்.
வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதைக் குறித்து நரிக்குறவ இனப் பெண் அனிதா, "நான் பிறந்து சேலத்திலுள்ள இதே தாரமங்கலத்தில்தான். இங்கே படிப்பதற்கான வசதிகள் எதுவுமே கிடையாது.

அதனால் எனது அப்பா, அம்மா என்னை மயிலாடுதுறைக்கு அனுப்பி அங்கேயே படிக்கவைத்தார்கள். அங்கேதான் எனது தாத்தா வீடு இருக்கிறது. ஆகவே அந்த ஊருக்குப் போனேன்.
இப்படி நானும் என் தம்பி, தங்கை மூன்றுபேருமே வெளியூரில்தான் படித்து வளர்ந்தோம். இந்த ஊரில் உள்ள எந்தப் பிள்ளைகளும் படித்ததே இல்லை. ஏனென்றால், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு இல்லை.

எங்குப் போனாலும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் எல்லாம் கேட்கிறார்கள். எங்கள் மக்கள் யாருக்கும் இதைக் கொடுக்கவே இல்லை. அதை எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா வந்த பிறகுச் சரியாகக் கொடுத்திருக்கிறார். இப்போது எல்லாம் ஆவணங்களும் எங்களிடம் சரியாக இருக்கின்றன.
நான் பி.ஏ. ஆங்கிலம் இலக்கியம் படித்தேன். அதனால் ஆட்சியர் கார்மேகம், இங்குள்ள அங்கன்வாடியில் என்னை உறுப்பினராகச் சேர்த்துள்ளார். இந்த அங்கன்வாடி மூலமாக எங்கள் குழந்தைகளும் வருங்காலத்தில் நல்ல படிப்பை மேற்கொள்வார்கள். அதற்கு என்னாலான உதவிகளைச் செய்வேன்" என்கிறார்.

"முதல்வர் ஸ்டாலின் அய்யாவுக்கு ரொம்ப நன்றி. நாங்கள் டிச்சியில் சாக்கடையில் படுத்துக் கிடந்தோம். எங்கள் பிள்ளைகளும் அதேபோலத்தான். இன்றைக்கு ஸ்டாலின் அய்யாதான் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
எங்கள் தாத்தன் முப்பாட்டன் காலத்திலிருந்து இப்படி ஒரு வீட்டில் யாருமே வாழ்ந்ததில்லை. இன்றைக்கு என் பிள்ளைகள் குடும்பம் நிம்மதியாகத் தூக்குவதற்கு ஸ்டாலின் அய்யாதான் காரணம். அய்யா நீங்கள் எங்கே இருந்தாலும் 100 வருஷம் நல்லபடியா வாழவேண்டும் சாமீ.

எல்லோரும் ஜாதி ஜாதி என்று பேசுகிறார்கள். நாங்கள் என்ன ஜாதி என்று எங்களுக்கேத் தெரியாது. பல வருஷமாகப் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் நரிக்குறவர் ஜாதிதான் என்று எங்களுக்குச் சான்றிதழ் கொடுத்ததே முதல்வர் ஸ்டாலின் அய்யாதான்" எனப் படப்பட என்று இருகரங்களைக் குவித்தபடி உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறார் மற்றொரு நரிக்குறவ பெண்.
"முன்னதாக தாரமங்கலம் பகுதியில் குடியிருந்து வந்தோம். முன்பு சின்ன துணிக் கொட்டகைப் போட்டு குடியிருந்து வந்தோம். சின்ன மழை வந்தாலும், வீடு முழுக்க தண்ணீர் வந்துவிடும்.

இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அய்யா எங்களுக்கு மெத்தை வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். விரைவில் நாங்கள் குடிவரப் போகிறோம். இதுவரை என் வாழ்நாளில் இந்த மாதிரி வீட்டை நினைத்துக்கூட பார்த்தது இல்லைங்கய்யா. அப்படிப்பட்ட வீட்டை ஸ்டாலின் அய்யா கொடுத்திருக்கிறார்.
"எங்கள் ஊர் மயிலாடுதுறை. அங்கிருந்து இங்கே வந்திருக்கிறேன். மயிலாடுதுறையில் மழை வந்தால், வீட்டுக்குள் முட்டிவரை தண்ணீர் வந்துவிடும். வாழவே முடியாது. அவ்வளவு அவஸ்தைப் பட்டோம். அப்படி தண்ணீர் வந்தால் ரோட்டுக்கு வந்து படுத்துவிடுவோம்.

எங்களுக்கு அரசாங்கம் வீடு கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. என்னப்பா, வீட்டையும் கட்டி, தண்ணீரும் கொடுத்து, கரண்ட்டும் போட்டு கொடுத்திருக்காங்களே என்று நினைச்சு நினைச்சு அசந்து போகிறோம். ஆடம்பரமாகச் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஆதரவு இல்லாத எங்களைப் போன்ற மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா ஆதரவு கொடுத்திருக்கிறார்.
இதற்கு முன்னால் போகின்ற ஊரில் படுப்போம். கிடைக்கின்ற இடத்தில் தங்குவோம். கொடுக்கின்ற சாப்பாட்டைச் சாப்பிடுவோம். எதுவும் நிரந்தரம் இல்லை. இப்போதுதான் ஸ்டாலின் அய்யா ஆட்சியில் எங்களுக்கு என்று ஒரு வீடு கிடைத்திருக்க சாமீ.
இனிமேல் எங்கள் பிள்ளைகள் இங்கு இருக்கின்ற பள்ளிக்கூடத்திலேயே படிப்பார்கள். நாங்கள் இந்த ஊரிலேயே தங்கிப் பிழைப்போம். ஒரு தொழில் செய்து நிம்மதியாக வாழ்வோம்" என்கிறார் இன்னொரு நரிக்குறவர் பெண்
"ஒரு வீட்டின் மதிப்பு தோராயமா ரூ. 5 லட்சம். ஒரு ரூபாய் வாங்காமல் அரசாங்கம் இதை எங்களுக்குக் கட்டிக் கொடுத்துள்ளது. தண்ணீர் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூட வசதி, அங்கன்வாடி, சுகாதார மையம், சாலை வசதி, ரேஷன் கடை என எல்லாவற்றையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு குறை சொல்ல முடியாது. அநாதையாக ரோட்டில் திரிந்தோம். இன்று எங்களுக்கு என்று வீடும், இடமும் கிடைத்திருக்கிறது.

உதவிப்பொறியாளர் சீனிவாசன், "கடந்த 50 வருடங்களாக தாரமங்கலம் ஏரிப்பகுதியில் இந்த நரிக்குறவ மக்கள் வாழ்ந்துவந்தார்கள்; அவர்கள் பல வருடங்களாக நிரந்தர வசிப்பிடம் இல்லாமல் கொட்டகை அமைத்து வாழ்ந்துவந்தார்கள்.
ஆகவே நரிக்குறவர் இனத் தலைவர் பார்த்திபன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன்பொருட்டு இவர்களின் நிலைமையை விளக்கும்படி முறையான ஆவணங்களைத் தயாரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை முழுமையாக ஆராய்ந்த முதல்வர், இவர்களுக்கு உடனடியாக வீடுகளைக் கட்டித்தர உத்தரவிட்டார்.
அதன்மூலம் முதற்கட்டமாக 48 குடும்பங்களுக்கு தாரமங்கலம் ஆரூர் பட்டி ஊராட்சியில் வருவாய்த்துறை மூலமாக வீட்டு மனைகளை தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆக மொத்தமாக மொத்தம் 60 வீடுகள் அமைய உள்ளன. இப்போது வீடுகளைக் கட்டித்தரும் பணிகள் நிறைவடைய உள்ளன. குறைந்தது ஒரு வீட்டின் மதிப்பு 4 லட்சத்து 62 ஆயிரமாகும்.
இவை மட்டுமன்றி, தனியே மின்சார வசதி, ஒவ்வொரு வீட்டுக்குத் தனியான குடிநீர் வசதி, அதேபோல் தண்ணீர் தொட்டி வசதி, அருகிலேயே அங்கன்வாடி, சமுதாயக்கூடம், நியாயவிலைக்கடை, அவர்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்வகையில் மகளிர் சுயஉதவிக் கூடம் எனப் பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம். அதற்கான தனி நிதியும் ஒதுக்கப்பட்டுச் செலவிடப்பட்டுள்ளது" என்கிறார்
சமூகநீதி என்பதற்குச் சரியான சான்று இந்தத் தாரமங்கலம் .
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications