பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்.. காவிரி நீருக்கு பூக்கள் தூவி மரியாதை

Subscribe to Oneindia Tamil

சேலம்: டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து நீரை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். காவிரி அண்ணையை வேண்டி மரியாதை செய்து பூக்கள் தூவி வரவேற்றார். மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த், அமைச்சர் தமிழன் விஜய் பார்த்திபன், ஆட்சியர்கள் உடன் இருந்தனர்.

டெல்டா பாசன வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பாததால், ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

CM Vijay to Opens Mettur Dam Sluice Gates for Delta Irrigation for the next 45 days

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 90 கன அடியை கடந்துவிட்ட சூழலில், இன்று முதல்வர் விஜய் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி பாசனத்தின் தேவைக்கேற்ப தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது.

முதல்வரான பின் விஜய் முதல்முறையாக மேட்டூர் அணையை திறந்து வைத்து உள்ளார். பின்னர் விவசாயிகள் கொடுத்த பச்சை துண்டை தோளில் அணிந்தபடி விஜய் விவசாயிகளுடன் பேசிக்கொண்டே வந்தார். பிறகு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் எங்கெல்லாம் செல்கிறது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

விஜய் முதல் முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டது தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட விமான நிலையம் வந்த முதல்வர் விஜய், பின்னர் சாலை வழியாக பயணித்து மேட்டூர் அணை சென்றார். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி மேட்டூர் அணைப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தொடர்ந்து மேட்டூர் அணையில் நீர்வளத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார். பின்னர் மேட்டூர் அணை மின் நிலையத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து விஜய், சேலம் விமான நிலையம் வந்து சென்னை திரும்புகிறார்.

விஜய்யின் வருகையையொட்டி மேட்டூர் அணைக்கு செல்லும் சாலையின் இரு பக்கமும் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் பாதையில் வந்துவிடக் கூடாது என்பதால், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் விமான நிலையம் முதல் மேட்டூர் அணை வரை வழியெங்கும் தவெக கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+