மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து.. 2 பேர் சடலமாக மீட்பு! மற்றவர்கள் கதி என்ன?
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்து 5 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் இன்று திடீர் விபத்து ஏற்பட்டது. நிலக்கரி எரிகலனில் நிலக்கரி கொண்டு செல்லும் கண்டெய்னர் பெல்ட் கழன்று நிலக்கடி தொட்டி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் புகையுடன் தீ பிடித்தது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் ஸ்ரீகாந்த், மனோஜ் குமார், சீனிவாசன், முருகன், கௌதம் ஆகிய ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த மேலும் சிலரை கண்டுபிடிக்க முடியாததால் நிலக்கரியை அப்புறப்படுத்தி, காணாமல் போன 2 தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 2 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அனல்மின் நிலைய விபத்தில் வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கரி குவியலில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுவதால் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த விபத்தால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும். நிலக்கரியை தேக்கி வைக்கும் பங்கர் டேங்க் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் எட்டு பேர் பணியாற்றி வந்ததாகவும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications