ஊழலில் சிக்கிய பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளருக்கு 1 லட்ச ரூபாய் ஓய்வூதியம்.. கொதிக்கும் ஊழியர்கள்
சேலம்: முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு பஞ்சப்படியுடன் ரூபாய் 1 லட்சம் ஓய்வூதியம் வழங்க பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.
அதே சமயம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது. அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார்.
ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலைப் பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதனையடுத்து பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்படாமல் பணி ஒய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலை. முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு ஒரு லட்ச ரூபாய் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் உத்தரவிட்டுள்ள தகவல் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரின் இந்த ஆணைக்கு, பேராசிரியர்கள், தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"ஊழல் புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் பதிவாளருக்கு ஓய்வூதிய பலன்களா?" என கேள்வி எழுப்பியுள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications