மை டியர் மச்சான்..கசந்து போன 10 ஆண்டு காதல்! மாமா குட்டியுடன் பறந்த சுதர்சனா! பரிதவிக்கும் பிஞ்சுகள்
சேலம்: சேலத்தில் காதலித்து திருமணம் செய்த தனது காதல் கணவன், ஆசை ஆசையாய் பெற்று எடுத்த இரண்டு குழந்தைகளை பரிதவிக்க விட்டு இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞரோடு இளம் பெண் தலைமறைவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மனிதர்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப் போன செல்போனால் கள்ளக்காதல் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப், பேஸ்புக் என பல்வேறு செயலிகளில் பெண்கள் அடையாளம் தெரியாத ஆண்களுடன் டப்ஸ்மாஷ் செய்து உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம்: தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. ஒற்றை செல்போனில் உலகமே கைக்குள்ளாக வந்துவிட்டதாக கருதும் நிலை தான் தற்போது உள்ளது. சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர். அவ்வாறு உலா வரும் பெண்கள் தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
சேலத்தில் அதிர்ச்சி: இதனால் பல நேரங்களில் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாது ஒன்றும் தெரியாத பிஞ்சு குழந்தைகளின் எத்ரிகாலமும் கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று தான் வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் சேலத்தில் அரங்கேறியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகே இருக்கும் கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுதர்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து கொண்டனர்.
சாட்டிங்கில் காதல்: இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே சுதர்சனா செல்போனை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் எப்போதும் பேசுவது சேட் செய்வது ரீல்ஸ் போடுவது என பிசியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞர் ஒருவருடன் சுதர்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. இதனால் எப்போதும் இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடந்துள்ளார் சுதர்சனா. ஒரு கட்டத்தில் மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கார்த்திக் அவரது செல்போனை பார்த்த போது தான் அவர் ஒரு இளைஞருடன் பேசி வந்தது தெரிய வந்தது.
இளம்பெண் மாயம்: அவருடனான பழக்கத்தை விட வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கார்த்திக் கூறியுள்ளார். ஆனாலும் சுதர்சனா அதை கேட்பதாக இல்லை. பத்து ஆண்டுகள் வாழ்ந்த கணவனை விட மூன்று மாதங்களில் பழகிய காதலன் பெரிதாக தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் instagram பயன்படுத்துவதை சுதர்சனா நிறுத்தாததால் கார்த்திக்கிற்கும் சுதர்சனாவிற்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை தனது இரண்டு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு சுதர்சனா மாயமாகியுள்ளார்.
போலீசார் விசாரணை: பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுதர்சனா இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசி வந்த மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்று இளைஞர் உடன் வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது. இதை அடுத்து அவரது செல்போன் சிக்னல்களை வைத்து எங்கு சென்றார்கள் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டது கார்த்திக் சுதர்சனா மட்டுமல்ல ஒன்றும் அறியாத இரண்டு சிறு பிள்ளைகளின் வாழ்வும் தான்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications