சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள்.. புது சிக்கல்

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்தார்.

Recommended Video

    சேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள் - வீடியோ

    சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக வரும் கொரோனோ நோயாளிகளுக்கு இடமில்லாமல் காத்திருக்கின்றனர். இதனால் ஆக்சிஜன் சிலிண்டரோடு நோயாளிகள் காத்திருக்கின்றனர். மேலும் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    corona patients are waiting at Salem Government Hospital

    அரசு மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளும் நிரம்பியதன் காரணமாக நோயாளிகள் காக்க வைக்கப்பட்டு, குணமடைந்து வெளியே செல்லும் படுக்கைகளுக்கு தகுந்தவாறு நோயாளிகளை அனுமதிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

    மேலும் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முழுமை அடையும் என்றும் கொரோனோ தொற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் முருகேசன் வேதனை தெரிவித்தார்.

    corona patients are waiting at Salem Government Hospital

    இதனிடையே மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டங்களில் ஆக்ஸிஜன் வசதி, படுக்கை வசதியை கண்காணிக்க வேண்டும் என்றும் மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Salem Government Hospital has patients waiting without bed facilities. Salem Government Hospital Chief Murugesan said that the number of deaths due to coronary disease is increasing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X