மோடி டாட்டா காட்டிவிட்டார்.. ஆக்ஷனை பார்த்தாலே தெரியும்.. தேர்தலில் இதான் நடக்கும்.. லியோனி பேச்சு!
சேலம்: 2024 தேர்தலோடு என் கதை முடியப்போகிறது என டாட்டா காட்டியபடி வந்தார் பிரதமர் மோடி. ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை அறிவிக்கும் வகையில் வணக்கத்துடன் வந்தார் முதல்வர் ஸ்டாலின் எனப் பேசியுள்ளார் திண்டுக்கல் ஐ. லியோனி.
சேலத்தில் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். அந்தவகையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி, "கலைஞர் பாதையில் நம் தலைவர்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். தனது பாணியில் பாடல்களைப் பாடி உரையாற்றினார் லியோனி.

ஐ.லியோனி பேசுகையில், "உலக அரசியல் கட்சியிலேயே இளைஞரணி என்ற அணியை மிக சிறப்பாக நடத்தி வருகின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா கற்றுக்கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் மாநாடு தொடங்கியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் இந்திய அளவில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்கி மதச்சார்பற்ற சக்தியை இந்தியாவை ஆளவைக்கக்கூடிய ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த மாநாடு அமையும்.
கூட்டணிக் கட்சிகளை மதித்ததில் மறைந்த தலைவர் கருணாநிதி வழியில் நம் தலைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த ஒரே தலைவர் நம் திராவிட மாடல் முதல்வர் அவர்கள்தான்.
வள்ளுவருக்கு காவி உடை உடுத்துகிறார், வள்ளலாரை சனாதனத்தின் தூதுவன் என்கிறார் ஆளுநர். ஜல்லிக்கட்டு சனாதன விளையாட்டு என்கிறார் மத்திய நிதியமைச்சர். இப்படி கலாச்சார திருட்டுகளைச் செய்து நம் கவனத்தை திசை திருப்பும் ஆரிய கலாச்சாரத்திற்கு முடிவு கட்டவே இந்த திமுக இளைஞரணி மாநாடு.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்தார். அங்கு அவர் மக்களை எல்லாம் பார்த்து எப்படி கை ஆட்டினார் பார்த்தீர்களா? டாட்டா காட்டிக் கொண்டிருந்தார். பின்னால் வந்த நம் முதல்வர் அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தபடியே வந்தார்.
2024 தேர்தலோடு என் கதை முடியப்போகிறது என டாட்டா காட்டியபடி வந்தார் பிரதமர் மோடி. ஆனால், 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை அறிவிக்கும் வகையில் வணக்கத்துடன் வந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த ஆக்ஷனை பார்த்தாலே 2024ல் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியும்." எனப் பேசினார் லியோனி.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications