சேலம் கோட்டையில் சீறிய திண்டுக்கல் லியோனி: "எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 2 பிரீஸர் பாக்ஸ் பார்சல்!"
சேலம்: சேலம் மத்திய மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் பேசிய திமுக கொள்கை பரப்பு செயலாளர் லியோனி, காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, பலகாரம், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்.. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பேசிய பேச்சுக்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சேலம் கோட்டை மைதானத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலி சிலிண்டர்களை வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் பேசிய லியோனி, "தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் பிரதமர் மோடி 3 முறை தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார். திமுக கூட்டணியின் வெற்றி என்பது இப்போது உறுதியாகிவிட்டது.
திண்டுக்கல் லியோனி
அந்த ஒரு நப்பாசையில், எப்படியாவது ஒன்றிரண்டு சீட்டுகளைப் பிடித்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில்தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு ஓடி வருகிறார். அவர் ஊருக்குத் தகுந்தாற்போல் பேசுகிறார். மதுரைக்குச் சென்றவர் மீனாட்சியைச் சந்திக்காமல், திருப்பரங்குன்றத்திற்குச் சென்றுள்ளார்.
சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது நமது திமுக அரசுதான்.
ஜல் ஜீவன் நிதி
"வருமுன் காப்பவன் அறிவாளி, வந்த பின் தவிப்பவன் ஏமாளி" என்று கலைஞர் ஒருமுறை கூறினார். அதன்படி, இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக அரசு தவித்து வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து திமுக வதந்தி பரப்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் பேசுவது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான்.
ஒன்றிய அரசு கல்வி நிதி ஒதுக்காதது, ஜல் ஜீவன் நிதி வழங்காதது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் முழுமையடையாதது மற்றும் கீழடி முடிவுகளை வெளியிடாதது உள்ளிட்ட 5 முக்கிய கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
டப்பா என்ஜின் எடப்பாடி
ஆனால், தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் மோடி இதற்கு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. இப்போது மக்கள் சாப்பாடு கேட்டால், நான் உங்களுக்கு 5 வயது குழந்தையாக இருக்கும்போது சோறு ஊட்டியவன் என்று கதை சொல்கிறார் மோடி. அதற்கு இந்த டப்பா என்ஜின் எடப்பாடியும் பக்கமேளம் வாசிக்கிறார்.
ஜல்லிக்கட்டில் யாராவது இறந்தால் அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், நமது முதல்வர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி - பிரீஸர் பாக்ஸ்
இதே நிலை நீடித்தால், எடப்பாடி பழனிசாமி போகிற போக்கில் அவர் வீட்டிற்கே 2 பிரீஸர் பாக்ஸ் தருவேன் என்று கூடச் சொல்லுவார். முதல்வர் ஸ்டாலின் அறிவாலயத்தில் அமர்ந்து கூட்டணி பற்றிப் பேசுகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு ஓடுகிறார். இதிலிருந்தே யார் அடிமை, யார் சக்கரவர்த்தி என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி." என்று பேசியிருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications